Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK v RCB -கேப்டன் யாராக இருந்தாலும், தல ஒருத்தர் தான்.. தோனியிடம் ஓடி சென்று ருதுராஜ் கேட்ட அறிவுரை

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் இடைவெளியின் போது தோனியிடம் சென்று அறிவுரைகளைக் கேட்ட நிகழ்வு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று தந்த மகேந்திர சிங் தோனி, தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகி ருதுராஜ்க்கு கேப்டன் பொறுப்புக்கு பரிந்துரை செய்திருந்தார்.

IPL 2024 - CSK Captain Ruturaj Gaikwad getting inputs from MS Dhoni in stragetic timeout


இந்த நிலையில் தற்போதைய புதிய சீசனில் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ருதுராஜ் கெய்க்வாடுக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்த அனுபவம் உள்ள நிலையில், ஐபிஎல் போன்ற நெருக்கடியான தொடரில் அவர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நான்கு ஓவரில் அதிரடியாக விளையாட முற்பட்ட ஆர் சி பி அணி, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதை அடுத்து பவர் பிளே முடிவில் ஆர்சிபி அணி 42 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பவுலர்களை மாற்றும் முறையில் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார்.

இந்த நிலையில் ஆர் சி பி அணி 9 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டைம் அவுட் இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று ருதுராஜ் தோனியிடம் ஓடி சென்று அடுத்தது என்ன செய்யலாம். யுத்திகளை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது தோனியின் ஒரு பயிற்சியாளர் போல் ருத்ராட்சைக்கு அறிவுரைகளை வழங்கினார் இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. போட்டி நடைபெறும் போது தோனி ருதுராஜ்க்கு எந்த அறிவுரையும் கூறவில்லை. ஆனால் இடைவெளியின் போது ருதுராஜ் கேட்டதற்கு தோனி சில அறிவுரைகளை வழங்கினார். இதை பார்த்ததும் ரசிகர்கள் கேப்டன் யாராக இருந்தாலும், அங்கு தலைவன் தோனி மட்டும் தான் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Story first published: Friday, March 22, 2024, 22:21 [IST]
Other articles published on Mar 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+