Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறார். சிஎஸ்கே அணிக்காக சாதாரண வீரராக இருக்கும் போதே அபாரமாக விளையாடி வரும் அவர் தற்போது கேப்டன் பொறுப்பை ஏற்று நல்ல ஒரு செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்துகிறார்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் இருக்கிறார்களோ, அவர்கள் தமிழகத்தின் செல்லப்பிள்ளை ஆகவே மாறிவிடுவார்கள். தோனி அவ்வாறுதான் தமிழகத்தில் பிரபலமானார். தோனி மட்டுமல்லாமல் அவருடைய மனைவி குழந்தை என ஒட்டுமொத்த குடும்பமே தமிழகத்திற்கு நல்ல பரிச்சயமாக மாறியது.

IPL 2024 - CSK captain Ruturaj Gaikwad Played cricket with his wife utkarsha pawar

அதேபோல் கேப்டன் ருதுராஜ் மனைவியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். அந்த வகையில் கேப்டன் ருதுராஜ் தன்னுடைய மனைவியுடன் இன்று கிரிக்கெட் விளையாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இது தொடர்பாக சென்னை அணி வெளியிட்டுள்ள வீடியோவில், ருதுராஜ் அவருடைய மனைவி உட்கர்சா பவாரும் கிரிக்கெட் விளையாடினர்.

அதில் தமக்கும் தம்முடைய மனைவிக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை கிரிக்கெட் தான் என்றும், கிரிக்கெட் மூலம் தான் தன் மனைவி எனக்கு கிடைத்ததாக ருதுராஜ் கூறினார். தற்போது தன்னுடைய மனைவி காயம் அடைந்திருப்பதால் அவரால் சரியாக பந்து வீச முடியாது. இதனை பயன்படுத்திக் கொண்டு அவருடைய ஓவரில் நான் ஆறு பந்திற்கு 6 சிக்சர் அடிக்க போகிறேன் என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் உட்கர்சா, கடுப்பானார். நான் காயமடைந்தாலும் பரவாயில்லை. உன்னை 10 ரன்களுக்கு மேல் நான் அடிக்க விடமாட்டேன் என்று அவர் கூறினார். உடனே மனைவி கோபம் ஆகிவிட்டதை உணர்ந்த ருதுராஜ், உனக்கு காயமாக இருப்பதால்தான் நான் அப்படி சொன்னேன். சரி உன் வழிக்கே வருகின்றேன். உன்னுடைய ஓவரில் நான் 10 ரன்கள் அடிக்கின்றேன் என்று கூறினார்.

இதனை அடுத்து உட்கர்சா பந்து வீச ருதுராஜ் பேட்டிங் செய்தார். அப்போது ஆறு பந்தில் அவர் 10 ரன்கள் எடுத்தார். எங்கே தாம் மனைவி கோபித்துக் கொள்வார் என்று உடனே நானும் வெற்றி பெறவில்லை, நீயும் வெற்றி பெறவில்லை. போட்டி டையில் முடிந்து விட்டதாக கூறி மனைவியிடம் சரண்டர் ஆனார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Thursday, April 18, 2024, 20:33 [IST]
Other articles published on Apr 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+