For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் தலையீடு இல்லை! ருதுராஜ் எடுத்த பலே முடிவு.. சிஎஸ்கே பயன்படுத்திய இளம் சிங்கம்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமான லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்சை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது 61வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் அளவிற்கு 141 எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.2 ஓவர்கள் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக இருக்கிறது.

IPL 2024 - CSK Captain Ruturaj opts for sameer rizvi turns in to golden move

இந்த நிலையில் சிஎஸ்கே அணி நேற்றைய ஆட்டத்தில் பல மாற்றங்கள் செய்தது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க ருதுராஜ் என தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமை கொஞ்சம் கூட இல்லை என்றும் அனைத்தையும் முழுக்க முழுக்க ருதுராஜ் தான் செய்தார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ரஹானேவுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு வழங்க அறிவுறுத்திய நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ரஹானேவை ருதுராஜ் அதிரடியாக நீக்கி ரச்சின் ரவீந்தராவுக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கினார். இதேபோன்று இம்பேக்ட் வீரராக ரஹானேவை கொண்டு வராமல் சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரரை ருதுராஜ் கொண்டு வந்தார். ரஹானேவுக்கு தொடக்கத்தில் நான்கு இடத்தில் தான் பேட்டிங் செய்ய வரும். ஆனால் தொடக்க நான்கு இடத்திலுமே வேறு நல்ல வீரர்கள் பார்முடன் இருப்பதால் ரஹானேவுக்கு இம்முறை இடம் கிடையாது என்று தெளிவான முடிவை ருதுராஜ் எடுத்தார்.

அதே போல் இம்பாக்ட் வீரர் என்றால் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இதனை மையமாக வைத்து சமீர் ரிஸ்வி என்ற 20 வயது வீரரை சிஎஸ்கே மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்த்தது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு எட்டு பந்துகளில் மூன்று பவுண்டரிகளை எடுத்து 15 ரன்கள் எடுத்தார்.

இதில் ஸ்ட்ரைக் ரேட் 187 என்ற அளவில் இருக்கிறது. முக்கியமான கட்டத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய பிளேயிங் லெவனை சரியாக தேர்வு செய்திருக்கிறது. மற்ற அணியின் இளம் கேப்டன்கள் தடுமாறி வரும் நிலையில் ருதுராஜ் தன்னுடைய முதல் சீசனில் கேப்டனாக சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று ரசிகர்களும் பாராட்டுகின்றனர்.

Story first published: Monday, May 13, 2024, 11:54 [IST]
Other articles published on May 13, 2024
English summary
IPL 2024 - CSK Captain Ruturaj opts for sameer rizvi turns in to golden move தோனியின் தலையீடு இல்லை! ருதுராஜ் எடுத்த பலே முடிவு.. சிஎஸ்கே பயன்படுத்திய இளம் சிங்கம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+