For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கேல் ஹஸி கருத்து

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் நடக்கப்போவதாக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தற்போது தடுமாறி வருவது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது.

அத்துடன் சம்பந்தமே இல்லாமல் நட்சத்திர வீரர் ரஹானேவும் சிஎஸ்கே அணி தொடக்க வீரராக அனுப்பியது. தற்போது இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கில் ஹஸி விளக்கம் அளித்திருக்கிறார்.
அதனை தற்போது பார்க்கலாம்.

IPL 2024 - CSK coach Micheal hussey hopes top order will come good

ரச்சின் ரவீந்திரா பயிற்சியில் நன்றாக செயல்பட்டு வருகிறார். இந்தியா போன்ற ஆடுகளங்களில் தொடக்க வீரராக விளையாடுவது மிகவும் கடினம் ரச்சின் ரவீந்திரா இரண்டு போட்டிகளில் சில வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் அவருடைய மனதளவில் அவர் நல்ல நிலையில் இருக்கின்றார். ஒரு இன்னிங்ஸில் அனைத்துமே மாறிவிடும் என்பது தான் நான் அவருக்கு சொல்லும் அறிவுரை.

ரச்சின் ரவீந்திரா விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை சிஎஸ்கே அணிக்காக அடிபார் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் நிச்சயம் அது சிஎஸ்கே அணிக்கு சிறப்பான விஷயமாக இருக்கும். எங்களுக்கு ரச்சின் ரவீந்திரா குறித்து கொஞ்சம் கூட கவலை இல்லை.

ஒவ்வொரு போட்டிக்கும் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து அவரே கவனம் செலுத்தி வருகிறார். ரச்சின் ரவீந்திராவுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. அது கிடைத்தால் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார். பேட்டிங் வரிசையில் சிஎஸ்கே அணியில் மாற்றம் நிகழப் போகிறது. ரஹானேவுக்கு லேசான காயம் இருந்தது. இதனால் தான் அவரை நாங்கள் தொடக்க வீரராக விளையாட வைத்தோம்.

இதன் மூலம் பவர் பிளேவில் விளையாடி ரன்கள் ஓடாமல் ஷாட்களை அடித்தால் போதும் என்று நினைத்தோம். இதனால்தான் ரஹானே தொடக்க வீரராகவும் ருதுராஜ் மூன்றாவது வீரராகவும் களமிறங்கினார். தற்போது ரகானே முழு உடல் தகுதியுடன் இருப்பதால் மூன்றாவது இடத்திற்கு வந்துவிடுவார். எனினும் நாளைய போட்டியில் தொடக்கத்தில் தான் இந்த முடிவை நாங்கள் எடுப்போம் என்று மைக்கில் ஹஸி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 23, 2024, 0:02 [IST]
Other articles published on Apr 23, 2024
English summary
IPL 2024 - CSK coach Micheal hussey hopes top order will come good ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+