Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரருக்கு பள்ளி தோழியுடன் திருமணம்.. வாழ்க்கையை மாற்றிய காதல் கதை.. இதயத்தை மாற்றி கொண்டோம்

மும்பை : சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே தமது நீண்ட கால தோழியை திருமணம் செய்து கொண்டார். 28 வயதான துஷார் தேஷ்பாண்டே, சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளராக விளங்கி வருகிறார். நடந்து முடிந்த சீசனில் தீபக்சாகர் பெரும்பான்மையான போட்டிகளில் இல்லாத நிலையில் துஷார் தேஷ் பாண்டே தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஆரம்ப காலத்தில் சில போட்டிகளில் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் தோனியின் அறிவுறுத்தலை பின்பற்றி அதிவேகமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்ததுடன் சிஎஸ்கே வின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்தார்.

IPL 2024 - CSK Cricketer Tushar Deshpande married his school friend

இந்த நிலையில் துஷார் தேஸ் பாண்டே தனது பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். துசார் தேஷ்பாண்டே பள்ளியில் படிக்கும் போது நபா என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார்.ஆனால் அவரிடம் தனது காதலை சொல்லாமலே துசார் தேஷ்பாண்டே இருந்திருக்கிறார்.வெறும் நட்போடு பழகிக் கொண்டிருந்த நிலையில் தேஷ் பாண்டே கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றியைப் பெற்று தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் தேஷ் பாண்டேவின் பெற்றோர்களே நபா வீட்டாரை அணுகி பெண் கேட்டுள்ளனர். தேஷ் பாண்டே சிறுவயதிலிருந்து அந்த பெண்ணை காதலித்து,அதையும் சொல்லாமல் இருந்து வந்தது அதன் பிறகு தான் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது.இதனை அடுத்து இரு விட்டாரும் ஒப்புக்கொள்ள தற்போது திருமணம் மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் நடைபெற்றது.

தேஷ் பாண்டேவின் மனைவி ஓவியராக திகழ்கிறார். துசார் தேஷ்பாண்டே 2020 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடினார்.ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி அவரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் சீசனில் அவர் வெறும் 2 போட்டிகளில் தான் விளையாடினார்.அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் தேஷ் பாண்டேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் அந்த சீசனின் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Story first published: Friday, December 22, 2023, 20:35 [IST]
Other articles published on Dec 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+