For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேக்கு ஆப்பு அடித்த கடைக்குட்டி சிங்கம்! தோனியின் வீக்னசை குறி வைத்த பஞ்சாப் கேப்டன்

சென்னை : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி இரண்டாவது தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த போட்டியில் மட்டும் சிஎஸ்கே அணி ஒரு 180, 190 ரன்கள் அடித்து இருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் சிஎஸ்கே அணியின் வீக்னசை சரியாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்திருக்கிறார்.

IPL 2024- CSK EX Player and PBKS Stand in captain sam curran used MS Dhoni weakness effectively

சாம் கரன் ஒரு காலத்தில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக விளங்கி இருந்தார். சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டராக மட்டுமல்லாமல் தோனியின் செல்ல பிள்ளையாக இருந்தார். எனினும் அடுத்த ஏலத்தில் அவர் சிஎஸ்கே அணியில் இருந்து பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் தோனிக்கு சமீப காலமாக ஒரு வீக்னஸ் இருக்கிறது.

அதன்படி ஐபிஎல் தொடரில் நூறு இன்னிங்ஸ்கள் விளையாடிய வீரர்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்த வீரர் என்ற சோகமான சாதனையை தோனி வைத்திருக்கிறார். தோனி இதுவரை 157 இன்னிங்ஸ்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 1583 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 110 ஆகும்.

இந்தப் டாப் ஆறு பட்டியலில் மொத்தம் நான்கு சிஎஸ்கே வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் சிஎஸ்கேவுக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள வராது என்பதை தெரிந்து கொண்ட சாம் கரன், நேற்றைய ஆட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து காய் நகர்த்தினார்.

குறிப்பாக தோனி களம் இறங்கியவுடன் ராகுல் சாகரை வைத்து சிஎஸ்கே வின் கொட்டத்தை சாம் கரன் அடக்கினார். குறிப்பாக ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் ராகுல் சாஹரை சிஎஸ்கே பயன்படுத்தியது. இதில் வெறும் மூன்று ரன்கள் மட்டும் தான் அடிக்கப்பட்டது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் தோனி ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் தடுமாறினார்.இந்த ஓவரில் மோயின் அலியும், பெரிய ஷார்ட் அடிக்க முற்பட்டு போல்ட் ஆனார்.

ஹர்பிரித் பிரார் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் வைத்து பஞ்சாப் அணி சிஎஸ்கேவின் கதையை முடித்தது. இதில் ஹர்பிரித் பிரார் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தார்.இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் நமது அணியின் பலவீனத்தை தெரிந்து கொண்டு சாம் கரன் சிறப்பாக செயல்பட்டதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, May 2, 2024, 15:10 [IST]
Other articles published on May 2, 2024
English summary
IPL 2024- CSK EX Player and PBKS Stand in captain sam curran used MS Dhoni weakness effectively சிஎஸ்கேக்கு ஆப்பு அடித்த கடைக்குட்டி சிங்கம்! தோனியின் வீக்னசை குறி வைத்த பஞ்சாப் கேப்டன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+