சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனே கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள் மேலும் சிலர் தங்களுடைய அணி தான் கெத்து என்ற சண்டையை தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் நடப்பு சீசனில் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. ஐபிஎல் வரலாற்றில் ஆர் சி பி அணி கடைசியாக சிஎஸ்கே வை சேப்பாக்கம் மைதானத்தில் 2008 ஆம் ஆண்டு தான் தோற்கடித்து இருக்கிறது.

அதன் பிறகு நடைபெற்ற அனைத்து போட்டிகளிலுமே சிஎஸ்கே அணி தான் சேப்பாக்கத்தில் ஆர் சி பி அணியை வீழ்த்தி இருக்கிறது. இதனால் இம்முறையும் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் வான்டட் ஆக வண்டியில் எரிய ஆர் சி பி அணி ரசிகர்கள், இம்முறை இந்த தோல்வி பயணத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்று சிஎஸ்கே அணி ரசிகர்களிடம் வம்பிழுத்தனர்.
தற்போது ஆர் சி பி அணியிடம் நல்ல ஸ்பின்னர்கள் இருப்பதாகவும் விராட் கோலி,முன்னாள் சிஎஸ்கே வீரரான டுபிளசிஸ் போன்ற வீரர்கள் தங்களிடம் இருப்பதால் இம்முறை சிஎஸ்கேவுக்கு தோல்வி நிச்சயம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி தந்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு இரண்டு புள்ளிகள் நிச்சயம் கிடைத்துவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆசிபி ரசிகர்கள் வாயை மூடும் அளவுக்கு ஒரு பாயிண்டை எடுத்து விட்டு இருக்கிறார்கள். அதில் விராட் கோலி குழந்தையால் சிஎஸ்கே அணிக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விராட் கோலி தன்னுடைய முதல் குழந்தையான வாமிகாவை ஈன்றெடுத்தார். அப்போது அதே ஆண்டில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
இதனால் தற்போது 2024 ஆம் ஆண்டு விராட் கோலி தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து கேட்க தான் தோன்றுகிறது. ஆனால் ஆர் சி பி ரசிகர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று அமைதியாக கடந்து செல்ல வேண்டியது தான்.