Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி தான் பிக்சிங் செய்தது.. ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த சிஎஸ்கே ரசிகர்கள்

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சிஎஸ்கே அணி முன்னேறியது.

சிஎஸ்கேவின் இந்த வெற்றியை குறை கூறும் விதமாக நேற்று ஆட்டத்தை சிஎஸ்கே பிக்சிங் செய்து விட்டதாக ஆர்சிபி ரசிகர்கள் குற்றம் சாட்டினர். அது மட்டுமல்லாமல் எக்ஸ் தளத்தில் பிக்சிங் என்ற டேக் செய்து சிஎஸ்கே வை கிண்டல் செய்தார்கள்.

IPL 2024 - CSK Fans hit backs RCB as Fixing after DC commits several mistakes

சிஎஸ்கேவுக்கு சாதகமாக முடிவுகள் அமையும்படி பிக்சிங் செய்யப்பட்டதாக ஆர்சிபி ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அன்று இரவு டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆர்சிபி ஆட்டத்தில் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் பல விஷயங்கள் ஆர்சிபிக்கு சாதகமாக நடந்தது.

இதனை பட்டியலிட்ட சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி தான் நேற்றைய ஆட்டத்தில் பிக்சிங் செய்ததாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வீரர்கள் 5 கேட்சுகளை வேண்டுமென்று தவறவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் டெல்லி அணி இரண்டு ஈஸியான ரன் அவுட்களை மிஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது கூட வேண்டுமென்று இரண்டு பேர் ரன் அவுட் ஆனதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் காரணம் காட்டி ஆர்சிபியும் பிக்சிங் செய்து இருக்கிறது என்று சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ஆர்சிபி அணி தோற்று இருந்தால் சில போட்டிகள் முடிவு சிஎஸ்கே சாதகமாக அமைந்து, கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்று இருந்தால் கூட பிளே ஆப்புக்கு சென்றிருக்க முடியும். இதனால் நேற்றைய ஆட்டம் சிஎஸ்கே ஆர்சிபிக்கு இடையிலான போட்டியை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி இருக்கிறது.

Story first published: Monday, May 13, 2024, 12:06 [IST]
Other articles published on May 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+