For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் கருத்து

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். 42 வயதான தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் விளாசி ஸ்ட்ரைக் ரேட்டை மேல் வைத்திருந்தார். இதேபோன்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.

IPL 2024 - CSK Head coach stephen fleming speaks about dhoni role

இதனால் தோனியை பேட்டிங் வரிசையில் முன்னேறி வந்து விளையாட வேண்டும் என ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் , தோனிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அதைத்தான் தோனி சிறப்பாக செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தோனிக்கு வயதாகி வருவதால் அவரை இனி பேட்டிங் வரிசையில் முன்பு களம் இறக்குவது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தோனியை பொறுத்தவரை தற்போது குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை அவர் சரியாக செய்வதாகும் தெரிவித்துள்ளார்.குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய பொறுப்பு தோனிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தோனி அதற்காக சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். சிஎஸ்கே அணியின் முன்வரிசை வீரர்கள் பெரிய ஸ்கோர் அடித்து விட்டு அணியை நல்ல நிலைக்கு கொண்டு வருவது மற்ற வீரர்களின் பொறுப்பு என்றும் தோனி கூறியுள்ளார்.குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுப்பது அவருடைய பொறுப்பு என்றும் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

தோனியின் இந்த செயல்பாடு மற்றவர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ஸ்டீஃபன் ஃபிளமிங், தோனியின் இந்த அதிரடி எங்களுக்கு ஒன்றும் ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர் எப்படி தயாரானார் என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்து விட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தோனியை தொடர்ந்து அனைவரும் களத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் எது சரியான நேரம் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஸ்டீஃபன் ஃபிளமிங் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 23, 2024, 16:25 [IST]
Other articles published on Apr 23, 2024
English summary
IPL 2024 - CSK Head coach stephen fleming speaks about dhoni role தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+