Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஷா கண்களில் மிளகாய் தூவிய சிஎஸ்கே.. பிசிசிஐ பேச்சை கேட்காமல் தைரியமாக முடிவெடுத்த தோனி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை மீறி சிஎஸ்கே தைரியமாக எடுத்த முடிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்பெல்லாம் 190 ரன்களுக்கு மேல் அடித்தால் அதனை எட்டுவது மிகவும் கடினமாக சேசிங் செய்யும் அணிக்கு இருக்கும்.

ஆனால் ஜெய்ஷா செயலாளராக இருக்கும் இந்த சூழலில் பௌண்டரி சிக்ஸர்கள் அதிகமாக சென்றால் தான் ரசிகர்கள் போட்டியை பார்ப்பார்கள் என தவறாக புரிந்து கொண்டு ஆடுகளத்தை ரன் குவிப்புக்கு சாதகமாக மாற்றிவிட்டார்.

IPL 2024- CSK hit backs Jayshah diktat for chepauk pitch


இது தொடர்பாக பிசிசிஐ சார்பாக விடுக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவில் ஆடுகளம் அனைத்தும் ரன் குவிப்புக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்றும் இரண்டாவது ஆக பேட்டிங் செய்யும் அணில் கூட வெற்றி பெறும் வகையில் பந்து பேட்டிற்கு நன்றாக வர வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. இதன்படி இயற்கையாகவே சென்னை சேப்பாக்கம் மைதானம், லக்னோ வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம் ஆகியவை ரன் குவிப்புக்கு ஏற்ற மைதானம் கிடையாது.

அங்கு பந்து பேட்க்கு மெதுவாக தான் வரும். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி பிரமாதமாக செயல்பட்டு வந்தது. சென்னை ஆடுகளத்தில் 170 ரன்கள் எடுத்தாலே அதனை துரத்துவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ஜெய்ஷாவின் புதிய முடிவால் நாட்டில் உள்ள அனைத்து ஆடுகளமும் ரன்குவிப்புக்கு சாதகமாக மாறியது.

இதனால் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கூட 200 ரன்னுக்கு மேல் அடித்தால் அதனை ஈசியாக சேசிங் செய்யும் அளவுக்கு முடிவுகள் மாறின. இந்த நிலையில் இதை கொஞ்சம் கூட விரும்பாத சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளை அழைத்து ஆடுகளத்தை பழைய படியே மாற்றுங்கள் என கூறியிருக்கிறார்.அதன் அடிப்படையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் தன்மை மாற்றப்பட்டு இருக்கிறது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்யும் அணி, நன்றாக அடித்தாலும் பிறகு ஆடுகளம் தோய்வாக மாறி பந்து பேட்டிற்கு வர கடினமாக மாற்றும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தான் நேற்று ஆட்டத்தில் பவர் பிளே முடிவதற்குள்ளே சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்ய முடியாமல் தடுமாறியது. ஜெய்ஷாவின் பேச்சை மீறி சிஎஸ்கே அணி ஆடுகளத்தின் கையை வைத்திருப்பது மற்ற அணிக்கும் ஒரு முன்னூதரனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, April 29, 2024, 18:31 [IST]
Other articles published on Apr 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+