Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆறாவது முறையாக கோப்பையை சிஎஸ்கே வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய நிலையில் ருதுராஜ் தற்போது தலைமை தாங்குகிறார். இது நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி மூன்று வெற்றி ,இரண்டு தோல்வி என 6 புள்ளிகள் உடன் தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

IPL 2024 - CSK Legend MS Dhoni record was equalled by Jadeja

சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கியதற்கு காரணம் வரலாற்று சிறப்புமிக்க ஜாம்பவான்கள் இந்த அணிக்காக விளையாடியதே காரணம். சிஎஸ்கே வீரர்கள் தனி ஆளாக நின்று அணியை பலமுறை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். தோனி, ரெய்னா என பலவீரர்கள் இந்த அணியை தங்களுடைய சொந்த உடமை போல் கட்டி காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிராக களம் இறங்கிய முன்னாள் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை சிஎஸ்கே அணிக்காக ஆட்டநாயகன் விருது வாங்கிய தோனியின் சாதனையை தற்போது ஜடேஜா சமன் செய்திருக்கிறார்.

தோனி இதுவரை 15 முறை ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். தற்போது ஜடேஜாவும் நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்றது 15 வது முறையாகும். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இருக்கிறார். ரெய்னா 12 முறை சிஎஸ்கே அணிக்காக ஆட்ட நாய்கள் விருதை வென்றிருக்கிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் இருக்கிறார். இவர் 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் முன்னாள் சிஎஸ்கே வீரர் மைக்கேல் ஹஸி பத்து முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் கே கே ஆர் ஐ வீழ்த்தியதன் மூலம் இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் 11 போட்டிகளில் கேகேஆர் எதிர் கொண்டு எட்டு முறை சிஎஸ்கே வெற்றி பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 9, 2024, 6:45 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+