Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR -ஐ வசமாக ஏமாற்றிய சிஎஸ்கே அணி.. சூப்பரா வலை விரித்து சிக்க வைத்த தோனி

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கே கே ஆர் க்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வெற்றியை பெறுவதற்கு வெறும் திறமை மட்டும் பத்தாது.

அதற்கு மேல் ஒரு தகுதி வேண்டும் என்பதை இந்த போட்டி காட்டி இருக்கிறது. கிரிக்கெட் ஒரு போர்க்களம். அதில் சரியாக காய் நகர்த்தி செயல்படும் நபர்களே வெற்றி பெறுவார்கள் என்பதையும் தோனி குழு இன்று காட்டியிருக்கிறது.

IPL 2024 - CSK Master plan to deceive KKR about chepauk pitch

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ஒரு கருத்தை சொன்னார். அதில் சென்னை ஆடுகளம் வழக்கமாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும். ஆனால் ஆடுகளம் இந்த சீசனில் வேறு மாதிரி இருக்கிறது. யாரை கேட்டாலும் ஆடுகளம் Hard ஆக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.

இந்த நிலையில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணியால் பணிக்கப்பட்டது. அப்போது பவர் பிளவில் பந்து நன்றாக பேட்டிற்கு வந்ததை வைத்து கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடியது. இதனால் ஆடுகளம் 20 ஓவர் முழுவதும் ஒரே மாதிரி இருக்கும் என நினைத்து கொல்கத்தா வீரர்கள் அதிரடி காட்ட முயன்றனர். ஆனால் அப்போது ஆடுகளத்தின் தன்மை தலைக்கீழ் மாறியது.

இதன் காரணமாக கே கே ஆர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதுகுறித்து ஸ்ரேயாஸ் பேசும் போது நாங்கள் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டோம் என்று கூறினார். வெற்றிக்குப் பிறகு பேசிய ஜடேஜாவும் ஆடுகளத்தை கணிப்பது என்பது எதிரணிக்கு சவாலான காரியமாக சேப்பாக்கம் மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார். அதாவது சேப்பாக்கம் ஆடுகளம் இவ்வாறுதான் செயல்படும் என்பது சிஎஸ்கே வீரர்களுக்கு முன்பே தெரியும்.

ஆனால் வெளியில் இருந்து வரும் அணி வீரர்களிடம் ஆடுகளம் நன்றாக ஹார்டாக இருக்கிறது. இதனால் வந்து பேட்டிற்கு வரும் என்ற ஒரு கருத்தை ஊடகம் மத்தியில் சிஎஸ்கே உருவாக்கி விட்டது. இதை நம்பி கே கே ஆர் அணியும் அதற்கு தகுந்தார் போல் திட்டத்தை மாற்றிக் கொண்டனர். ஆனால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு திடீரென்று சாதகமாக மாறியதால் கே கே ஆர் அணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்தத் திட்டத்தை தீட்டியதே தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, April 9, 2024, 7:19 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+