சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆர் சி பி அணியை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஆர் சி பி அணியும் சிஎஸ்கே அணியும் எட்டு முறை மோதி இருக்கிறார்கள்.
இதில் ஏழு முறை சிஎஸ்கே அணியும் ஒரு முறை ஆர்சிபி அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆர் சி பி அணி சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி சுமார் 16 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த ரெக்கார்டை உடைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆர் சி பி இருக்கிறது. இந்த நிலையில் நடப்புச் சாம்பியன் ஆன சிஎஸ்கே அணி தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறது. இன்னும் சிஎஸ்கே அணியில் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாததால் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ரச்சின் ரவிந்திரா அல்லது டேரல் மிட்செல் ஆகியோர் களமிறங்க கூடும். மற்றொரு தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார்.இந்த நிலையில் மூன்றாம் வீரராக மோயின் அலி விளையாடக் கூடும்.
நான்காவது வீரராக ரஹானேவும் ஐந்தாவது வீரராக ஜடேஜா, ஆறாவது வீரராக தோனி, ஏழாவது வீரராக சிவம் துபே, எட்டாவது வீரராக சர்துல் தாக்கூர், ஒன்பதாவது வீரராக தீபக் சாகர், பத்தாவது வீரராக மகிஷ் தீக்சனா அல்லது பிரசாந்த் ஷோலங்கி, பதினோராவது வீரராக முஸ்தஃபீஷர் ரஹ்மான் ஆகியோர் களமிறங்க கூடும்.
இதில் சிவம் துபேவை வழக்கம்போல் தோனி இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. சிவம் துபே காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவருக்கு பதில் அறிமுக வீரரான சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே பயன்படுத்தலாம். இதே போல் ரகானே ரஞ்சி கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை. அவருடைய பார்ம் குறித்தும் சந்தேகம் நிலவுகிறது. இதனால் முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு தரப்படுமா இல்லையெனில் டேரல் மிச்செல் நடுவரிசையில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் (கணிப்பு) : 1. ரச்சின் ரவீந்திரா, 2,ருதுராஜ் கெய்க்வாட், 3, மோயின் அலி. 4. ரஹானே/டேரல் மிட்செல், 5,ஜடேஜா, 6, தோனி, 7, சிவம் துபே/சமீர் ரிஸ்வி, 8, சர்துல் தாக்கூர், 9, தீபக் சாஹர், 10, மகீஷ் தீக்சனா, 11, முஸ்தபிசுர் ரஹ்மான்/தேஷ்பாண்டே ( டேரல் மிட்செல் பிளேயிங் லெவனில் இருந்தால், முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார்).
இம்பேக்ட் வீரர்- சிவம் துபே/சமீர் ரிஸ்வி