For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால், 10 புள்ளிகளை பெறும்.

அதுவே மிகப்பெரிய வெற்றியாக அமைந்தால் ரன் ரேட்டில் ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளிவிடும். தற்போது முதல் பாதியில் 7 போட்டியில் விளையாடி நான்கு வெற்றி, மூன்று தோல்வி என அடைந்துள்ள சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகள் ஆவது வெல்ல வேண்டும்.

IPL 2024- CSK Might Give one more chance to daryl Mitchell in new role


இதனால் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் விளையாட போகும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய டேரல் மிட்செலை தொடர்ந்து சொதப்பி வந்ததால் லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் மற்றொரு நியூஸிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவும் தொடக்க வீரராக தடுமாறி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திரவை தூக்கிவிட்டு தொடக்க வீரராக டேரல் மிட்செலை களம் இறக்கலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய கான்வேவும், டேரல் மிட்செலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி விளையாடக்கூடிய வீரர்கள் என்பதால் இந்த மாற்றத்தை தோனி திரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு சில போட்டிகள் ஓய்வு அளித்துவிட்டு டாரல் மிட்சலை இந்த இடத்தில் களம் இறக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதைப்போல் கேப்டன் ருதுராஜ் மீண்டும் தொடக்க வீரராக களம் இறக்கி விட்டு ரகானே விற்கு பதில் மோயின் அலியை மூன்றாவது வீரராக விளையாட வைக்க சிஎஸ்கே நிர்வாகம் யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

டேரில் மிட்செலை தொடக்க வீரராக களம் இறங்குவது மிகப்பெரிய பலத்தை சிஎஸ்கே அணிக்கு கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.நடு வரிசையில் மிட்செல் விளையாடும் போது பவர் பிளே முடிந்து விடுவதால் அவரால் அதிரடியாக விளையாட முடிவதில்லை. இதுவே தொடக்க வீரராக மிட்செல் விளையாடும் போது பவர் பிளேவை பயன்படுத்தி அவர் அதிரடி காட்ட முடியும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Story first published: Tuesday, April 23, 2024, 7:30 [IST]
Other articles published on Apr 23, 2024
English summary
IPL 2024- CSK Might Give one more chance to daryl Mitchell in new role சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+