Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-க்கு வந்து இறங்கிய இடி.. ரூ.14 கோடி போச்சா.. முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்

Daryl Mitchell : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. சிஎஸ்கே அணியில் ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் மோயின் அலி, தற்போது முன்பு போல் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

இதேபோன்று பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறார். இதனால் நடு வரிசையில் மிகப்பெரிய மாற்றத்தை சிஎஸ்கே அணி மேற்கொண்டது.

IPL 2024 - CSK New Player Daryl Mitchell injured his foot and ruled out

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து வீரர் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. டேரல் மிட்செல் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக ரன்களை அடித்தார். மேலும் சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். இவர் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் டாரல் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியது. ஐபிஎல் ஏலத்திற்கு பிறகும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்கள் எல்லாம் டேரல் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் அவர் நல்ல பார்மில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் டேரல் மிட்செலுக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

காயத்தின் தன்மை மிகவும் அதிகமாக இருப்பதால் அவர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதன் பிறகு நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டேரல் மிட்செல் காயம் தீவிரமாக இருப்பதால் அவர் ஐபிஎல் தொடருக்கு திரும்புவது சந்தேகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிஎஸ்கே அணி டேரல் மிட்செலை வைத்து போட்ட பிளான் எல்லாம் தற்போது பாழாகி இருக்கிறது. டாரல் மிட்செல் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது சிஎஸ்கே அணி டேரல் மிட்செல் இல்லை என்றால் தங்களுடைய யுக்திகளை தலைகீழாக மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணி அதிக விலைக்கு கொடுத்து எடுக்கும் வீரருக்கு காயம் ஏற்படுகிறது. இது சிஎஸ்கேவுக்கு பிடித்த சாபமா என்று ரசிகர்களும் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

Story first published: Thursday, February 8, 2024, 17:09 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+