மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து சமீர் ரிஸ்வி என்ற 20 வயதான வீரரை சிஎஸ்கே வாங்கி உள்ளது. சமீர் ரிஸ்வி ரெய்னாவை போலவே விளையாடுவதால் அவரை வலது கை பேட்ஸ்மேன் ரெய்னா என்று உள்ளூரில் அழைப்பார்களாம்.
இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய சமீர் ரிஸ்வி தாம் மேற்கொண்ட உழைப்புக்கு எல்லாம் 50 சதவீதம் வரை பலன் கடைத்திருக்கிறது என நினைக்கிறேன். என்னால் இரவு தூங்கவே முடியவில்லை.

சிஎஸ்கே வில் நான் விளையாட போவது கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக கருதுகிறேன். ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கு எல்லாராலையும் விளையாட முடியாது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். சாம்பியன் அணியில் நானும் தற்போது ஒரு அங்கம் வகிக்க போகிறேன். என்னை ரசிகர்கள் ரெய்னா உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
நான் வலது கை பேட்ஸ்மேன் ரெய்னா என்று மக்கள் கூறினால் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா என்ன செய்தாரோ அதையும் நானும் செய்ய முயற்சி மேற்கொள்வேன்.
ரெய்னா போலவே நானும் பில்டிங் செய்ய எனக்கும் பிடிக்கும். சிஎஸ்கேவுக்காக நான் அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். 2022 ஆம் ஆண்டு 19 வயது உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் நான் இடம்பெறவில்லை.
அப்போது நான் சோகமாக இருந்தேன். அப்போதுதான் U19 உலக கோப்பையில் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவுக்கோ இல்லை ஐபிஎல் தொடருக்கோ விளையாட முடியாது என்று அர்த்தம் கிடையாது என்று தோனி கூறியதை நான் கேள்விப்பட்டேன்.சென்னை ஆடுகளும் எவ்வாறு செயல்படும் என்று எனக்கு தெரியும். அதற்கு ஏற்றார் போல் நானும் என்னுடைய பயிற்சியை மாற்றிக் கொள்வேன்.
ஐபிஎல் தொடரில் நாங்கள் 14 போட்டிகளில் வெவ்வேறு ஆடுகளில்தான் விளையாட போகிறோம். இதனால் அனைத்து விதமான ஆடுகளத்திற்கும் ஏற்ற வகையில் பயிற்சி செய்வேன். இதற்காக என்னுடைய இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று சமீர் ரிஸ்வி கூறியுள்ளார்.