Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி மட்டுமல்ல.. நானும் கார் லவ்வர் தான்.. ரூ.2.96 கோடிக்கு பிரம்மாண்ட காரை வாங்கிய சிஎஸ்கே வீரர்!

மும்பை : சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான அஜிங்கியா ரஹானே ரூ.2.96 கோடி மதிப்பிலான மெர்சிடஸ் மேபேச் ஜிஎல்எஸ் காரை வாங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கார் மற்றும் பைக் மீது அதிகளவிலான விருப்பம் கொண்டவர். பழங்காலத்து கார், பைக்கில் இருந்து தற்போது வந்த புதிய மாடல் வரை அத்தனை வகையான கார், பைக்குகளையும் தோனி தனது வீட்டிலேயே வைத்துள்ளார். சமீபத்தில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனியின் பைக் கலெக்‌ஷனை பார்த்து வியந்து வீடியோவை வெளியிட்டது ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது.

IPL 2024 : CSK Player Ajinkya Rahane got Mercedes Maybach GLS car of worth Rs.2.96 Crores in Mumbai

இந்த நிலையில் தோனியை போல் மற்றொரு சிஎஸ்கே வீரரான அஜிங்கியா ரஹானேவும் காரில் அதிக விருப்பம் கொண்டவர். நட்சத்திர கார் விரும்பியான ரஹானே, ஏற்கனவே பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி, அவ்டி க்யூ5, உள்ளூரில் பயணம் செய்வதற்காக மாருதி சுசூகி வாகன் ஆர் மற்றும் மனைவி, குடும்பத்தினருக்கு என்று வெவ்வேறு கார்களை வைத்துள்ளார்.

தற்போது மெர்சிடஸ் மேபேச் ஜிஎல்எஸ் காரை ரூ.2.96 கோடிக்கு வாங்கியுள்ளார் ரஹானே. இதன் புகைப்படங்களை ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டிலேயே ரஹானேவுடனான பிசிசிஐ ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், ஐபிஎல் தொடரின் ஏலத்திலும் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார்.

என்னதான் இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரஹானே. அதேபோல் சிஎஸ்கே அணிக்காக 2வது சீசனில் களமிறங்கவும் தீவிரமாக தயாராகி வருகிறார். 35 வயதாகும் ரஹானே இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ.5.9 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரஹானே சுமார் ரூ.3 கோடிக்கு கார் வாங்கியது பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. அதேபோல் இந்த மெர்சிடஸ் கார் 250 கிமீ வேகத்தில் சில நிமிடங்களில் பறக்கும். போலார் ஒயிட் நிறத்தில் அஜிங்கியா ரஹானே இந்த காரை வாங்கியுள்ளார். இந்த கார் பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 22, 2024, 13:33 [IST]
Other articles published on Feb 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+