For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சிஎஸ்கே அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் சிவம் துபே, ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அபாரமாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய குஜராத் அணி சிஎஸ்கே வின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தார்கள்.

IPL 2024 - CSK Player MS Dhoni argued with umpires to change the ball

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இந்தப் போட்டியில் ருதுராஜ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், தோனி செய்த ஒரு சம்பவம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என்று கூட சொல்லலாம். சிஎஸ்கே அணி முதல் சில ஓவர்களை வீசும்போது ரன்கள் அதிகப்படியாக சென்றது.

இதனைப் பார்த்த தோனி சிஎஸ்கேவுக்கு வழங்கப்பட்ட பந்தை சோதனை செய்தார். அது பந்து வீசுவதற்கு ஏதுவான வகையில் இல்லை என்று அவர் தெரிந்து கொண்டார். கில் சிக்சர் அடித்தவுடன் நடுவரிடம் சென்று தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.சிஎஸ்கே அணிக்கு வழங்கப்பட்ட பந்து சேதம் அடைந்திருப்பதாக தோனி சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க ஏதுவாக இருப்பதாகவும் எங்களுக்கு சரியான பந்தை வழங்க வேண்டும் என்று தோனி முறையிட்டார். இதனை அடுத்து நடுவர்கள் பந்தை சோதனை செய்தனர். அப்போது பந்து சேதம் அடைந்திருப்பது உறுதியானது. அடுத்து வேறு ஒரு பந்தை நடுவர்கள் தோனிக்கு வழங்கினார்கள்.

இது ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. புதிய பந்தை பெற்றவுடன் சிஎஸ்கே பவுலர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினர். தோனி மட்டும் சரியான நேரத்தில் நடுவர்களிடம் பந்தில் இருக்கும் குறையை குறித்து கேட்கவில்லை என்றால் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோற்றுப் போய் இருக்கலாம்.

Story first published: Wednesday, March 27, 2024, 18:23 [IST]
Other articles published on Mar 27, 2024
English summary
IPL 2024 - CSK Player MS Dhoni argued with umpires to change the ball.எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+