மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் நான்கு வெற்றி இரண்டு தோல்வி என புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி நாளை வெள்ளிக்கிழமை லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது.
சிஎஸ்கே அணி நன்றாக விளையாடி வந்தாலும் அந்த அணியில் பெரிய பிரச்சனைகள் இன்னும் அப்படியே இருக்கின்றது. பேட்டிங்கில் சில வீரர்கள் இன்னும் தங்களுடைய பார்மை மீட்கவில்லை. பந்து வீச்சிலும் சில தடுமாற்றத்தை சிஎஸ்கே கண்டு வருகிறது.

எனினும் சில தனிப்பட்ட வீரர்களின் அபார செயல்பாடு காரணமாகத்தான் சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் 35 வயது வீரரான ரஹானே, கடந்த சில போட்டிகளாக தடுமாறி வருகிறார். ரஹானே நடப்பு சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி வெறும் 124 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இதில் அதிகபட்ச ஸ்கோர் 45 ரன்கள் ஆகும். நடப்பு தொடரில் சராசரியாக 24 ரன்கள் அடித்திருக்கும் ரஹானே, ஸ்டிரைக் ரேட் 125 என்ற அளவில் தான் அடித்திருக்கிறார். இது ரஹானே கடந்த சீசனில் 326 ரன்கள் குவித்து இருந்தார். ரகானே தன்னுடைய பார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார். இதனால் ராஹானவை நீக்கிவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கடந்த சில போட்டிகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஹானேவிற்கும் வயது ஆகிவிட்டதால், அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவரை கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி பிளேயிங் லெவனில் எட்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ள சமீர் ரிஸ்வி இருந்தாலும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ரஹானேவை நீக்கிவிட்டு சமீர் ரிஸ்வியை அந்த இடத்தில் வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது.
இதேபோன்று ரகானேவிற்கு பதில் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர், நிசாந்த் சிந்து, அல்லது சாயிக் ரசீத் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. சிஎஸ்கே அணியில் நடைபெறும் இந்த மாற்றம் காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரஹானேவுக்கு கடைசியாக ஒரு போட்டியில் வாய்ப்பு வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு சிஎஸ்கே அணியில் மாற்றம் நடைபெறலாம்.