சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் இலக்காக குவித்து இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களம் இறங்கிய சிஎஸ்கே அணியின் ருதுராஜ் மற்றும் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக விளையாடி குவித்தனர். ரச்சின் ரவீந்தரா இன்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடி ரன்களை குவித்தார்.

எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் பௌண்டரி, சிக்ஸர் என அவர் பறக்க விட்டார். மூன்று சிக்சர் ஆறு பவுண்டரிகளை விளாசிய ரச்சீன் ரவீந்தரா 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதனால் ரச்சின் ரவீந்தரா அரை சதத்தை கடந்து பெரிய ஸ்கோர் அடிபார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷித் கான் பந்து வீச்சில் ஸ்டெம்பிட் ஆகி அரை சதத்தை நான்கு ரன்களில் தவறவிட்டார்.
இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 5.2 ஓவர்களில் எல்லாம் 62 ரன்கள் சேர்த்தது. அதேபோன்று அனுபவ வீரர் ரஹானே 12 ரன்களில் வெளியேற ருதுராஜ்க்கு 36 பந்துகளை எதிர் கொண்டு 46 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும்,ஒரு சிக்ஸரும் அடங்கும். சிஎஸ்கே அணியின் ரன் வேகம் தேக்க நிலை அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நடுவரிசை நாயகன் சிவன் துபே களமிறங்கி பட்டாசு போல் வெடிக்க தொடங்கினார்.
சிவம் துபேவை கட்டுப்படுத்த குஜராத் வீரர்கள் தடுமாறினர். கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அனைத்து பந்தையும் அடித்த ஆட சிவம் துபே முற்பட்டார். சிவம் துபே 23 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள் சேர்த்தார். இதில் 5 இமாலய சிக்சர்களும், இரண்டு பவுண்டர்களும் அடங்கும். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.
சிவம் துபேவுக்கு நல்ல கம்பெனி கொடுத்த டேரல் மிட்செல் 20 பந்துகளை எதிர் கொண்டு அவர் 24 ரன்கள் சேர்த்தார். இறுதியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தாம் எதிர்கொண்ட முதல் பந்திலே சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆறு பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு சிக்சர்களை விளாசி 14 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஜடேஜா மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் அடிக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் நான்கு ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டை எடுத்தார்.