For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மச்சக்காரன் என்றால் அது நமது தீபக்சாகர் தான். சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தீபக்சாகர் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஐபிஎல் வாழ்க்கையை சிஎஸ்கே வில் தொடங்கும் போது தீபக்சாகர் சிறப்பாக விளையாடி வந்து தோனியின் நம்பிக்கையை பெற்றார்.

இதனால் தீபக்சாகரை தொடர்ந்து சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு தீபக்சாகர்க்கு 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் வாங்கியது. இந்த மூன்று ஆண்டுகளில் அவருடைய சம்பளம் 42 கோடி ரூபாயைமொத்தமாக சிஎஸ்கே விடம் வாங்கி இருக்கிறார்.

IPL 2024 - CSK Star bowler Deepak chahar is the worst performer and got 3 crores per match

ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போட்டி எவ்வளவு என்று கேட்டால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள். ஆம் இந்த மூன்று ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக அவர் வெறும் 14 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். காரணம் தீபச்சாகர் அடிக்கடி காயம் அடைந்து போட்டியிலிருந்து விலகிவிடுவார்.

இப்படி அடிக்கடி காயம் அடைந்து இருப்பதால் இந்த மூன்று ஆண்டுகளில் அவர் 14 ஆட்டத்தில் தான் விளையாடுகிறார். நடப்பு சீசனில் கூட தீபக்சாகருக்கு காயம் ஏற்பட்டு பல போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் 14 போட்டிகளில் விளையாடி மொத்தமே 17 விக்கெட் களைத்தான் தீபக்சாகர் எடுத்திருக்கிறார்.

அதன்படி பார்த்தோம் என்றால் ஒரு போட்டிக்கு 3 கோடி ரூபாய் என தீபக்சாகர் சம்பளம் வாங்கி இருக்கிறார். இது தோனி, ஜடேஜா ஆகியோரை விட மிகவும் அதிகம் ஆகும். அது மட்டுமல்லாமல் தீபக்சாகர் எடுக்கும் ஒரு விக்கெட்டுக்கு இரண்டு கோடியே 47 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்து இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் ஸ்டார் வீரராக விளங்கும் பதிரானா,இரண்டு சீசனில் விளையாடி 50 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 17 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட் வீழ்த்திருக்கிறார். இப்படி மிகவும் மோசமாக விளையாடி வரும் தீபக்சாகருக்கு இவ்வளவு கோடி ரூபாய் தேவையா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் தொடர்ந்து காயம், ஃபார்ம் அவுட் என்று தடுமாறி வரும் தீபக்சாகர் சிஎஸ்கே அணியில் இனியும் இருப்பது சுத்த வேஸ்ட் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும் தீபக்சாகருக்கு எங்கேயோ மச்சம் இருப்பதால் சிறப்பாக விளையாடாமலும் சிஎஸ்கே அணியில் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.

Story first published: Friday, April 19, 2024, 23:26 [IST]
Other articles published on Apr 19, 2024
English summary
IPL 2024 - CSK Star bowler Deepak chahar is the worst performer and got 3 crores per match மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+