For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் கான்வே காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக கான்வே திகழ்கிறார்.

சிஎஸ்கே அணிக்காக 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 924 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் ஒன்பது அரை சதம் அடங்கும். கான்வேவும், ருதுராஜும் தொடக்க வீரர்களாக இணைந்து பல போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற காரணமாக இருந்திருக்கிறார்கள்.

IPL 2024 - CSK Star Devon conway ruled out as England pacer Richard Gleeson named as replacement

இந்த நிலையில் நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன்பு கான்வேவிற்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மே மாதம் கான்வே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நினைத்தபடி கான்வேவின் காயம் குணமடையவில்லை. மேலும் t20 உலக கோப்பை நடைபெற உள்ளதால், கான்வே ஐபிஎல் தொடரில் ரிஸ்க் எடுக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

இதனால் கான்வேவிற்கு அவர்கள் அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து கான்வேவிற்கு பதில் மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது. அதன்படி கான்வேவிற்கு பதில் மாற்றுவீராக பேட்ஸ்மேனை தேர்வு செய்யாமல் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இது தோனி படை செய்த மாஸ்டர் ஸ்டோர்க்காக கருதப்படுகிறது.

ஏனென்றால் சிஎஸ்கே அணியில் தற்போது இரண்டு வெளிநாட்டு வேக பந்துவீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள். பதிரானா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இணைந்து தற்போது விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் மே மாதம் முழுவதும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி ஜிம்பாவே உடன் விளையாட உள்ளதால் முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனை சமாளிக்கும் விதமாக தற்போது கான்வே வெளியேறி இருப்பதால் அவருக்கு பதிலாக வேகப்பந்துவைச்சாளர் கிளீசென்னை தேர்வு செய்து இருக்கிறது. கிளீசென் உயரமான வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார்.

மேலும் அவருடைய யாக்கர் அபாரமாக இருக்கும். கிளீசன் யாக்கரை எதிர்கொள்வது மிகவும் கடினம். இதுவரை 6 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடிய கிளீசென் 101 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் கிளீசனுக்கு டி20 போட்டிகளில் அனுபவம் இருப்பதால் அவர் சிஎஸ்கே அணிக்கு இணைய இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. கிளீசெனின் அடிப்படை விலை 50 லட்சம் ரூபாய் ஆகும். இந்த விலைக்கு அவர் சிஎஸ்கே அணியில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 18, 2024, 15:01 [IST]
Other articles published on Apr 18, 2024
English summary
IPL 2024 - CSK Star Devon conway ruled out as England pacer Richard Gleeson named as replacement சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+