Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி சிஎஸ்கேவை அடிச்சிக்கவே முடியாது.. இந்த ஒரு வீரர் மட்டுமே போதும்.. முன்னாள் வீரர் பாராட்டு

மும்பை : பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்த நிலையில் தற்போது எந்த அணி பலமாக விளங்குகிறது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளது. இது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் தான் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக பலரும் பாராட்டு வருகின்றனர். மும்பை அணி தங்களுக்கு தேவையான வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கி குவித்து விட்டதாகவும் சிஎஸ்கே அணி தங்களுக்கு தேவையான வீரர்களை குறைந்த விலையில் வாங்கி விட்டதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

IPL 2024 - CSK strength is increased and variery of fast bowlers says Aaakash chopra

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி பலம் வாய்ந்ததாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்துல் தாக்கூர் போன்றோரை குறைந்த விலையில் வாங்கி விட்டதால் அவர்கள் டாரல் மிட்செலுக்கு 14 கோடி ரூபாய் கொடுக்கும் அளவுக்கு வசதி இருந்தது.

டேரல் மிட்செல் அசத்தலான வீரராக இருக்கிறார். அவர் நிச்சயம் வரும் ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சமீப காலமாக மோயின் அலி பெரிய ஆட்டத்தை ஏதும் வெளிப்படுத்தவில்லை. பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்ம் இதனால் மோயின் அலிக்கு நல்ல மாற்று வீரராக டேரல் மிட்செல் விளங்குவார். சிஎஸ்கே அணி தங்களுடைய நான்கு வெளிநாட்டு வீரர்கள் யார் என்பதில் தற்போதைய தீர்மானித்து விட்டார்கள்.

தொடக்க வீரராக சிஎஸ்கே அணி கான்வேவை பயன்படுத்தும் நிலையில் டாரல் மிட்செல் நடு வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவார். இதைப் போன்று பந்துவீச்சில் மகீஷ் தீக்சனா மற்றும் பதிரனா என இரண்டு இலங்கை வீரர்களை சிஎஸ்கே பயன்படுத்தலாம். இல்லையென்றால் முஸ்தஃபீசுர் ரஹ்மான் போன்ற வேகப்பந்துவீச்சாளரையும் சிஎஸ்கே பயன்படுத்தலாம் என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

சிஎஸ்கே நினைத்தால் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இருப்பது போலவும் பிளேயிங் லெவனை மாற்றிக் கொள்ளும் வசதி இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ள ஆகாஷ் சோப்ரா, தற்போது சிஎஸ்கே அணியில் தீபக்சாகர், ராஜ்வரதன் ஹங்கேர்கர்,முகேஷ் சவுத்ரி, தேஷ்பாண்டே போன்ற வீரர்கள் உள்ள நிலையில் தற்போது ஷாதுல் ஷர்துல் தாக்கூர், முஸ்தஃபிருர் ரஹ்மானும் அணியில் சேர்ந்திருப்பது சிஎஸ்கே வின் வேகப்பந்து வீச்சின் பலத்தை கூட்டியிருப்பதாக ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

Story first published: Friday, December 22, 2023, 15:35 [IST]
Other articles published on Dec 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+