Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யோ! ஜடேஜா உனக்கு ஓவர் குசும்புயா.. சிஎஸ்கே ரசிகர்களை கியூட்டாக கலாய்த்த தளபதி ஜடேஜா.. என்ன நடந்தது?

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் கே கே ஆர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 6 புள்ளிகள் உடன் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தளபதி ஜடேஜா பந்துவீச்சில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இரண்டு கேட்ச்களை பிடித்தார். இந்தப் போட்டியில் ஜடேஜா ரசிகர்களை க்யூட்டாக கலாய்த்த சம்பவம் தற்போது அரங்கேறியது.

IPL 2024 CSK vs KKR Match - Jadeja teases fans by wearing helmet instead of ms dhoni

கடந்த சீசனில் தோனி எப்போது பேட்டிங் செய்ய வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஜடேஜா ஆட்டமிழக்கும் போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக கத்தி கொண்டாடுவார்கள். சொந்த அணி வீரர் ஆட்டமிழக்கும் போது கத்தும் ஒரே ரசிகர்கள் சிஎஸ்கே தான் என்று பலரும் அப்போது கிண்டல் அடிப்பது உண்டு. .

பெரும்பாலும் ஜடேஜா ஆட்டம் இழக்கும் போது தான் இப்படி அமையும். ஏனென்றால் தோனி களத்திற்கு வரப்போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் இவ்வாறு கொண்டாடுவார்கள் .ஆனால் இது ஜடேஜாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த வேதனையை அவர் வெளிப்படையாகவே கடந்த சீசனில் கூறிவிட்டார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தான் இருந்தது. அப்போது பேட்டிங் வரிசைப்படி ஜடேஜா தான் களத்திற்கு வர வேண்டும். ஆனால் தோனி முன்கூட்டியே தாம் வந்து பேட்டிங் செய்வதாக முடிவு எடுத்து விட்டார். ஆனால் இது ரசிகர்களுக்கு தெரியாது. மூன்று ரன்கள் தான் இருக்கப் போகிறது இதனால் தோனி வருவாரா இல்லை பேட்டிங் வரிசைப்படி ஜடேஜா வருவாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.



அப்போது திடீரென்று ஜடேஜா பேட் ஹெல்மெட் அனைத்தையும் மாட்டிக் கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வந்தார் இதனை பார்த்தவுடன் சரி இன்றைய ஆட்டத்தில் தோனி வரமாட்டார் என முடிவெடுத்தனர். அப்போது திடீரென்று ஜடேஜா வந்த வேகத்தில் திரும்பி உள்ளே ஓடிவிட்டார். அதன் பிறகு தோனி களத்திற்கு வந்தார். அப்போது தான் தெரிந்தது, ஜடேஜா ரசிகர்களை ஏமாற்றும் விதமாக இவ்வாறு செய்திருக்கிறார்.

இதனை சிஎஸ்கே அணியில் உள்ள மற்ற வீரர்களும் நிர்வாகிகளும் கைத்தட்டி கொண்டாடினார்கள். ரசிகர்கள் ஜடேஜாவின் வருகையை பார்த்து ஒரு நிமிடம் ஷாக் ஆனார்கள். ஆனால் அவர் கிண்டல் செய்வதற்காக தான் இவ்வாறு செய்திருக்கிறார் என தெரிந்தவுடன் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர்.
Story first published: Tuesday, April 9, 2024, 9:30 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+