Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த சிஎஸ்கே வீரர் ஆர்சிபியின் ஸ்லீப்பர் செல்.. கடைசி வாய்ப்பு கொடுக்கும் தோனி.. மாற்று வீரர் ரெடி

சென்னை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை கெடுப்பதற்காகவே rcb அனுப்பியுள்ள ஸ்லீப்பர் செல்தான் ரச்சின் ரவீந்திரா என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பிறகு அதிக ரன் குவித்த வீரர் என்றால் அது ரச்சின் ரவீந்திரா தான்.

இளம் வயதிலேயே உலக கோப்பை தொடரில் மூன்று சதம் அடித்து பட்டையை கிளப்பினார். ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் என பன்முகத் திறமை கொண்டிருக்கும் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணியால் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டார்.

IPL 2024 CSK vs LSG- Fans trolls Rachin ravindra as sleeper cell of RCB for this reason


ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி முதல் போட்டியில் 37 ரன்களும் இரண்டாவது போட்டியில் 46 ரன்கள் எடுத்து அசத்திய ரச்சின் ரவிந்திரா, அடுத்த ஐந்து போட்டியில் மொத்தமாகவே 46 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். இதில் ஒரு முறை கூட அவர் 20 ரன்களை தாண்டவில்லை.

முதல் இரண்டு போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 237 ஆக இருந்தது. ஆனால் அடுத்த ஐந்து போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 108 என்ற அளவில் இருக்கிறது. கடைசியாக ரச்சின் ரவிந்திரா விளையாடிய 5 போட்டிகளில் அவர் 46 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.இந்த நிலையில் ரச்சின் ரவீந்தராவை மாற்ற வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரச்சின் ரவீந்தராவுக்கு பதில் மோயின் அலி அல்லது டேரல் மிட்செலையே தொடக்க வீரராக சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் தான் ரச்சின் ரவீந்திராவின் பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் ரச்சின் ரவீந்திரா தாம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக தான் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.

அதில், தன்னுடைய பூர்வீகம், தாத்தா பாட்டி எல்லாம் பெங்களூருவில் தான் இருந்ததாகவும். பெங்களூருவில் சிறுவயதில் அடிக்கடி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள ரச்சின் ரவீந்திராவின் ஆர் சி பி அணிக்காக விளையாட நான் ஆர்வமாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை சுட்டிக்காட்டியுள்ள ரசிகர்கள் ரச்சின் ரவீந்திரா, ஆர் சி பி ஆர் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, April 23, 2024, 7:01 [IST]
Other articles published on Apr 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+