Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்து இருந்தது. போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்தபோது இது குறித்து பேசிய சிவம் துபே, நாங்கள் எடுத்திருக்கும் ஸ்கோர் வெற்றிகரமான ஸ்கோர் என்று சொல்ல முடியாது.

வேண்டுமானால் 10 ரன்கள் கூடுதலாக எடுத்து இருப்போம் என நினைக்கின்றேன். பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் நன்றாக பந்து வீச வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்று கூறியிருந்தார்.

IPL 2024 CSK vs LSG - Jadeja poor batting performance made fans angry

சிவம் துபே கூறியது போல் சி எஸ் கே அணி வீரர்கள் மோசமாக பந்து வீசியதால் இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இதன் மூலம் சென்னை மண்ணில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்திய அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமையை லக்னோ படைத்திருக்கிறது. பல தவறுகளை செய்திருந்தாலும் பவுலர்களை குறை சொல்ல முடியாது.

ஏனென்றால் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பந்து சோப்பு போல் வழுக்கி சென்றது. இதனால் பில்டர்கள் மற்றும் பௌலர்கள் என அனைவருமே தடுமாறினர். இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கப் போகிறது என்றால் 240 ரன்கள் எடுத்தால் தான் ஓரளவுக்கு நிம்மதியாக பவுலர்களால் பந்து வீசி இருக்க முடியும். சிஎஸ்கே அணி அடித்தது நல்ல ஸ்கோர் என்றாலும் ஜடேஜா மற்றும் டேரல் மிட்செல் ஆகியோர் பெரிய இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பேட்டிங் வரிசையில் இன்றைய ஆட்டத்தில் நான்காவது வீரராக ஜடேஜா களமிறங்கினார். ஆனால் அவர் 19 பந்துகளை எடுத்துக்கொண்டு வெறும் 16 ரன்கள் தான் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் தான் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 84 என்ற அளவில் தான் இருந்தது. ஜடேஜாவின் இந்த மோசமான செயல்பாடு சிஎஸ்கே அணியின் ஸ்கோர் விகிதத்தை வெகுவாக குறைத்தது.

இதனால் சிஎஸ்கே அணி முதல் 9 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் தான் எடுத்திருந்தனர். கடைசி பத்து ஓவர்களில் தான் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடியது. இதனால் பவர் பிளே மற்றும் முதல் 10 ஓவரில் சி எஸ் கே கொஞ்சம் பெரிய ஸ்கோர் அடித்து இருந்தால் நிச்சயமாக இன்றைய ஆட்டத்தில் வெற்றியை பெற்றிருக்க முடியும். தொடக்க வீரர்கள் யாருமே சிஎஸ்கே அணிகள் சரியாக விளையாடுவது தான் தோல்விக்கு காரணமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை பேட்டிங்கில் முன்வரிசையில் களம் இறக்குவது வேஸ்ட் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, April 24, 2024, 7:00 [IST]
Other articles published on Apr 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+