சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஏலத்தில் எடுத்தது. நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா அந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து இருந்தார்.
சுழற் பந்து வீச்சும் தெரிந்த ரச்சின் ரவீந்திரா, சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் ஏலத்தில் பெரிய அளவு போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அவரை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் ஏலத்தில் எடுத்தது.

மேலும் சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக இந்த தொடர்பு விளையாடாத நிலையில் ரச்சின் ரவிந்திரா அவருடைய இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தார் போல் ரச்சின் ரவீந்திரா அபாரமாக ipl தொடரை தொடங்கினார். முதல் போட்டியிலே ஆர் சி பி அணிக்காக 37 ரன்கள் விளாசிய ரவீந்தரா, குஜராத் அணிக்கு எதிராக 46 ரன்கள் சேர்த்தார்.
இதனால் சிஎஸ்கே அணி ஒரு நல்ல தொடக்க வீரரை கண்டுபிடித்து விட்டது என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தார்கள். முதல் இரண்டு போட்டியில் மொத்தம் 35 பந்துகளை எதிர் கொண்டு 83 ரன்கள் எடுத்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 237 என்ற அளவில் இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ ரச்சின் ரவீந்திராவின் பேட்டிங் ஃபார்ம் கடுமையாக பாதித்திருக்கிறது.
அடுத்த 5 போட்டிகளில் ரச்சின் ஒருமுறைதான் 20 ரன்கள் தொட்டிருக்கிறார்.கடைசியாக அவர் விளையாடிய 5 போட்டியில் மொத்தமே 46 பந்துகளை பிடித்து 50 ரன்கள் சேர்த்திருக்கிறார்.தற்போது லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு டக் அவுட்டும் இதில் அடங்கும். இதில் அவருடைய சராசரி வெறும் பத்து என்ற அளவில் இருக்கிறது.
ஸ்டிரைக் ரேட் 108 என்ற அளவில் இருக்கிறது. சிஎஸ்கே அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கும். ஆனால் தற்போது ரவீந்திரா தொடர்ந்து ஐந்து போட்டிகளாக ஏமாற்றி வருவதால் சிஎஸ்கே அணியின் தொடக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனையை சிஎஸ்கே விரைவில் சரி செய்தால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்லுவதற்கான தகுதி இருக்கும். ரச்சின் தன்னுடைய பார்மை மீட்பரா? இல்லை சிஎஸ்கே மாற்றுவீரரை தேடுமா என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது.