For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியை 18 ரன்களில் தோற்கடித்தால் ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.. மிரள வைக்கும் கணக்கு

சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் உள்ளது.

IPL 2024 CSK vs RCB If RCB beat CSk by 18 runs they will move to play-off

தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீதமுள்ள நான்காவது இடத்தை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. டெல்லி, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி பெரிய வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மே 18 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும் அதேபோல பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுப்பதாக வைத்துக் கொண்டால், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை பெங்களூரு அணியால் முந்த முடியும். மேலும், போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் 14 புள்ளிகளை பெற்று, நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பெங்களூர் மைதானத்தில் 200 ரன்களை எளிதாக எடுக்கலாம் என்பதால் இந்த கணக்கை விமர்சகர்கள் முன் வைக்கின்றனர். முதலில் ஆடும் அணி எடுக்கும் ரன்களுக்கு ஏற்ப இந்த கணக்கில் மாறுபாடு இருக்கும். இதையடுத்து சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்களிடையே பரபரப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, May 13, 2024, 8:35 [IST]
Other articles published on May 13, 2024
English summary
IPL 2024 CSK vs RCB: If RCB beat CSk by 18 runs, they will move to play-off
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+