For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன அண்ணே எப்படி இருக்க? தோனியை கட்டி அணைத்து அன்பை பொழிந்த கோலி.. இது தான் பாசம்

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆர்சிபி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு நட்சத்திர விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பி இருக்கிறார்.

இதேபோன்று கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணியை தலைமை தாங்குகிறார். இந்த நிலையில் கிரிக்கெட் உலகில் தோனியும் விராட் கோலி அண்ணன் தம்பி போல் பழகி வரும் நபர்களாக இருக்கிறார்கள்.

IPL 2024 CSK vs RCB match- Virat kohli Hugs MS Dhoni picture wins the internet

சொல்லப்போனால் விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பை பரிந்துரை செய்ததே தோனி தான். விராட் கோலிக்கு எப்போதெல்லாம் கிரிக்கெட்டில் நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தோனி அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இவர்களுடைய நட்பு கிரிக்கெட்டையும் தாண்டி பெருமளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் விராட் கோலியும், தோனியும் இன்றைய ஆட்டத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது தோனியை கட்டி அணைத்த விராட் கோலி அவரிடம் நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. இருவரும் எவ்வளவு பாசத்துடன் இருந்தால் எதிரணிக்காக விளையாடும்போது கூட இப்படி தோள் மீது கையை போட்டு அன்பை பரிமாறிக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்தது குறித்துதான் விராட் கோலி பேசி இருப்பார் என்று ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இனி தோனியின் விராட் கோலியும் களத்தில் சந்தித்துக் கொள்ளப் போவது இதுதான் கடைசி சீசன் என்று நினைக்கும் போது மனம் வேதனை கொள்வதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அபாரமாக விளையாட வேண்டும். அதேசமயம் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த புகைப்படமாக இதுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Friday, March 22, 2024, 20:57 [IST]
Other articles published on Mar 22, 2024
English summary
IPL 2024 CSK vs RCB match- Virat kohli Hugs MS Dhoni picture wins the internet என்ன அண்னே எப்படி இருக்க? தோனியை கட்டி அணைத்து அன்பை பொழிந்த கோலி.. இது தான் பாசம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+