For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி செய்யலாமா.. இளம் வீரரிடம் ஆக்ரோஷத்தை காட்டிய விராட் கோலி.. கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை : சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்து வெளியேறிய போது, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

17வது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இளம் வீரர் அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 48 ரன்கள் சேர்த்தார்.

IPL 2024 CSK vs RCB News in Tamil Virat Kohli celebrated aggressive after Rachin Ravindra got out for 37 runs against RCB at Chepauk

சிஎஸ்கே அணி தரப்பில் நட்சத்திர பவுலர் முஷ்தஃபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்து வெற்றியடைந்தது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்களும், சிவம் துபே 28 பந்துகளில் 34 ரன்களும், ரஹானே 27 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் சேர்த்தனர்.

இந்த போட்டியில் ஆட்டநாயனகாக இளம் வீரர் முஷ்தாஃபிசுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் ரச்சின் ரவீந்திராவின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்துள்ளது. தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக விலகியதால், அவரது இடத்தில் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். ஆர்சிபி அணியின் ஷார்ட் பால் வியூகத்தை எளிதாக சமாளித்து பவர் பிளே ஓவர்களிலேயே வெளுத்து கட்டினார்.

அல்ஜாரி ஜோசப், சிராஜ், யாஷ் தயாள் என்று ஆர்சிபி அணியின் முக்கிய பவுலர்களையும் வெளுத்ததன் காரணமாகவே சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதேபோல் ஃபீல்டிங்கிலும் ரச்சின் ரவீந்திராவின் செயல்பாடுகள் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்து வெளியேறிய போது விராட் கோலியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.

இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களமிறங்கினார். இளம் வீரரான ரச்சின் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி அவரை நோக்கி ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்திற்கு, அவரின் விக்கெட் வீழ்த்தப்பட்டதற்கு ரச்சின் ரவீந்திராவே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 23, 2024, 12:34 [IST]
Other articles published on Mar 23, 2024
English summary
IPL 2024 CSK vs RCB News in Tamil : Virat Kohli celebrated aggressive after Rachin Ravindra got out for 37 runs against RCB at Chepauk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+