சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறக்கூடிய கடைசி ஆட்டத்தில் பங்கேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை பெற்று இருக்கிறது.
இன்னும் சிஎஸ்கேவுக்கு ஒரு ஆட்டம் தான் எஞ்சி இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி மீண்டும் ஒருமுறை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட முடியுமா என்பது தெரியாது.

இதனால் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த உடனே சிஎஸ்கே வீரர்களுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக சிஎஸ்கே அணி சார்பாக வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சி எஸ் கே வில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் மெடல் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற ஏழு போட்டிகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி வளம் வந்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்திருக்கிறார். தோனிக்கு இது கடைசி போட்டியாக சென்னையில் இருக்கலாம் என்பதால் தோனியை வழி அனுப்புவதற்காக அவர் வந்திருப்பதாக செய்திகள் வெளியானது. அது மட்டும் இல்லாமல் தோனியின் ரெய்னாவும் சந்தித்தவுடன் இருவரும் கட்டியணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தோனிக்கும் ரெய்னாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகள் வெளி வந்தது. ஆனால் இருவரும் இதுபோல் சந்திக்கும்போது, ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி வருகிறார்கள். ரெய்னாவை சிஎஸ்கே அணி உடன் பார்த்த பிறகு ரசிகர்களும் உற்சாகமாக இருந்தார்கள் . பிராவோ போல் ரெய்னாவையும் சிஎஸ்கே அணியின் பயிற்சி குழுவில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் ரெய்னாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதால்தான், அது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.