For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஆறுச்சாமி டா".. மிரண்டு போன அஸ்வின்.. ஒரே ஓவரில் சிஎஸ்கே பக்கம் வந்த மேட்ச்.. சிவம் துபே அதிரடி

சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி போட்டியில் கடினமான பிட்ச்சில் சிஎஸ்கே அணி சேஸிங் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் "ஆறுச்சாமி" என அழைக்கப்படும் அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபே ஒரே ஓவரில் போட்டியை சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாற்றினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததால் அந்த அணிக்கு குறைவான ஸ்கோரை எடுத்திருந்தது.

IPL 2024 CSK vs RR Shivam Dube changed the match in Ravichandran Ashwin over

சிஎஸ்கே இந்த சேஸிங்கை திட்டமிட்டு அணுகியது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிலையாக நின்று நிதானமாக ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அவரை சுற்றி அதிரடி ஆட்டம் ஆடும் வகையில் திட்டமிட்டு இந்த சேஸிங்கை அணுகியது.

அதற்கேற்ப ருதுராஜ் கெய்க்வாட் நிலையாக ஆட ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களும், டேரில் மிட்செல் 13 பந்துகளில் 22 ரண்களும் அடித்தனர். மொயீன் அலி 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்து சிவம் துபே அதிரடி ஆட்டம் ஆடினால் போட்டி சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறும் நிலை இருந்தது.

அவர் களத்துக்கு வந்த போது 49 பந்துகளில் 56 ரன்கள் தேவை என்று நிலை இருந்தது. ஏதேனும் ஒரு ஓவரில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நிலையில் அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இந்த கடினமான பேச்சில் ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்ததை பார்த்து முன்னாள் வீரர்களே ஆச்சரியமடைந்தனர்.

அதே ஓவரின் கடைசி பந்தில் சிவம் துபே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆடிய ஆட்டத்தால் போட்டி சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியது. அதாவது 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலைக்கு வந்தது. இதை அடுத்து ராஜஸ்தானுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. பின்னர் 18.2 ஓவர்களில் எல்லாம் சிஎஸ்கே அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, May 12, 2024, 19:17 [IST]
Other articles published on May 12, 2024
English summary
IPL 2024 CSK vs RR: Shivam Dube changed the match in Ravichandran Ashwin over
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+