Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு காயம்.. வலியால் துடித்தார்! அடுத்த போட்டியில் பங்கேற்பாரா?

சென்னை : ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடப்பு தொடரில் புதிய கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் செயல்பட்டு வருகிறார்.

எப்படி 2022 ஆம் ஆண்டு ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே தடுமாறியதோ அதேபோல் ருதுராஜ் செயல்பட போகிறார் என்று ரசிகர்கள் பயந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் ஒரு அளவுக்கு டீசன்டாகவே விளையாடி வருகிறது.

IPL 2024 CSK vs SRH - Chennai skipper Ruturaj gaikwad injured his finger

பேட்டிங்கில் சிஎஸ்கே அணியில் பெரிய பிரச்சனை இருக்கிறது. கான்வே போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடாத நிலையில் சிஎஸ்கேவுக்கு அது பின்னடைவு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் தனி ஆளாக பேட்டிங்கில் மிரட்டி வருகிறார். சிவம் துபே நடுவரிசையில் அதிரடியாக விளையாடினாலும், இன்னிங்ஸ் முழுவதும் ருதுராஜ் தான் சிஎஸ்கே அணியை வழி நடத்தி வருகிறார்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். ரஹானே 9 ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரல் மிட்செல், ருதுராஜ் அதிரடி காட்டியது. குறிப்பாக ருதுராஜ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார்.

இதில் மூன்று சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும். ருதுராஜ் பேட்டிங் செய்யும்போது சில ஷாட்டை ஆடும்போது அவருக்கு கையில் வலி ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் பில்டிங் செய்யும்போது ருதுராஜ்க்கு கை விரலில் Band-aid போட்டு தான் விளையாடி வந்தார். அப்போது சர்துல் தாக்கூர் ஓவரில் பில்டிங் செய்யும் போது ருதுராஜ் பந்தை பிடித்தவுடன் வலியால் துடித்தார். ஏற்கனவே கைவிரலில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேட்டில் மீண்டும் பந்து பட்டதால் அவருக்கு வலி ஏற்பட்டது.

இதனை எடுத்து மருத்துவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து ருத்ராஜுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். எனினும் ருதுராஜ் களத்தில் கேப்டன் ஆகவே தொடர்ந்தார். காயம் அதிகமாக இருந்தால் பேட்டை பிடிப்பது கடினம் என்பதால் அடுத்த போட்டியில் ருதுராஜ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சிஎஸ்கே அணி வரும் வியாழக்கிழமை பஞ்சாப் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 28, 2024, 23:24 [IST]
Other articles published on Apr 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+