For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பிரம்மாண்ட உலக சாதனை.. டி20 வரலாற்றிலேயே அதிக 200+ ரன்கள் குவித்து ரெக்கார்டை உடைத்த சிஎஸ்கே

சென்னை : உலக அளவில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 46வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ஸ்கோர் ஆகும்.

IPL 2024 CSK vs SRH Chennai Super Kings scored the most 200 plus scores in T20 cricket

2008 முதல் ஐபிஎல் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 முறை 200க்கும் அதிகமாக ரன் குவித்து இந்த சாதனையை எட்டி உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டும் 32 முறை 200க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து கவுன்டி அணியான சோமர்செட் டி20 போட்டிகளில் 34 முறை 200க்கும் அதிகமாக ரன் சேர்த்து இருந்தது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடித்து இருக்கிறது. இதே பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி (31 முறை) மூன்றாவது இடத்திலும், ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (31 முறை) நான்காவது இடத்திலும், இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் (29 முறை) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200க்கும் அதிகமாக ரன் குவித்த அணிகள் -

35 - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐபிஎல்)

34 - சோமர்செட் (இங்கிலாந்து கவுன்டி அணி)

32 - இந்தியா (தேசிய கிரிக்கெட் அணி)

31 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஐபிஎல்)

29 - யார்க்ஷயர் (இங்கிலாந்து கவுன்டி அணி)

28 - சர்ரே (இங்கிலாந்து கவுன்டி அணி)

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 18.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Sunday, April 28, 2024, 23:55 [IST]
Other articles published on Apr 28, 2024
English summary
IPL 2024 CSK vs SRH: Chennai Super Kings scored the most 200 plus scores in T20 cricket 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+