CSK vs SRH: தோனி அடித்த முதல் பந்து.. பதறிய மனைவி சாக்ஷி.. குஷியான சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
சென்னை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த போது தோனி கடைசி ஓவரில் களமிறங்கினார். அப்போது அவர் அடித்த முதல் பந்திலேயே அவுட் ஆகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அதைக் கண்டு அவரது மனைவி சாக்ஷி பதறினார்.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக களமிறங்கி 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்து இருந்தார். மறுபுறம் சிவம் துபே அதிரடி ஆட்டம் ஆடி வந்த நிலையில் தோனி கடைசி 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் களமிறங்கினார்.

நடராஜன் வீசிய அந்த ஓவரில் தோனி தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸராக அடிக்க முயன்றார். ஆனால், பந்து பவுண்டரி எல்லைக்கு முன்பே கீழே சென்றது. அப்போது அருகே ஃபீல்டிங் நின்று இருந்த அபிஷேக் சர்மா பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்தார். இதை அடுத்து தோனி அவுட் ஆகி விடுவார் என பலரும் நினைத்தனர். தோனியின் மனைவி சாக்ஷி தலையில் கை வைத்து பதறினார்.

ஆனால், அபிஷேக் சர்மா அந்த கடினமான கேட்ச்சை தவற விட்டார். இதை அடுத்து பந்து பிட்ச் ஆகி பவுண்டரியை கடந்து ஃபோர் ஆனது. இதை அடுத்து சாக்ஷி உட்பட அனைத்து சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகத்தில் கரை புரண்டனர். அடுத்த பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார். அதன் பின் சிவம் துபே ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் சிவம் துபே ஒரு ரன் எடுத்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமாக ஆடி விக்கெட்களை இழந்தது.


Click it and Unblock the Notifications