For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாரும் 14 புள்ளிகள் தான் போல..லக்னோவுக்கு வந்து இறங்கிய இடி..ரன் ரேட்டால் டெல்லிக்கு வந்த சிக்கல்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் டெல்லியில் நடைபெற்ற 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்ன அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் இளம் அதிரடி வீரர் ஜாக் பிரேசர் வெளியேற அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். சாய் ஹோப் 38 ரன்களும், கேப்டன் பந்த் 33 ரன்களும் எடுக்க இறுதியில் டிரிஸ்டன் ஸ்டாப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினார்.

IPL 2024 - DC beat LSG as their play off choice hangs in thread

இதன் மூலம் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் கே எல் ராகுல் ஐந்து ரன்களிலும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களிலும், தீபக் ஹூடா டக் அவுட் ஆகியும் குயின்டன் டீ காக் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய தொடங்கின. எனினும் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். யாருமே எதிர்பாராத வகையில் ஹர்ஷத் கான் பவுலராக இருந்தும் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஐந்து சிக்ஸர், 3 பவுண்டரி எடுத்தார். இதனால் 33 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த நிலையில் எஞ்சிய வீரர்கள் யாரும் துணை நிற்காததால் லக்னோ அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் வரை எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி இனி அதிகபட்சமாக 14 புள்ளிகளை தான் பெற முடியும். தற்போது டெல்லி அணியும் 14 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் மைனஸில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி கடைசி போட்டியில் தோற்றாலும் சன்ரைசர்ஸ் எஞ்சியிருக்கும் கடைசி இரண்டு போட்டிகளும் தோற்றாலும் ஐந்து அணிகள் 14 புள்ளிகளில் ஐபிஎல் தொடரை நிறைவு செய்யும் இதனால் ரன்ரேட் தான் யார் அடுத்த சுற்றுக்கு சொல்லப் போகிறார் என்பதை நிர்ணயிக்கும்.

Story first published: Tuesday, May 14, 2024, 23:58 [IST]
Other articles published on May 14, 2024
English summary
IPL 2024 - DC beats LSG as their play off chance hangs in thread எல்லாரும் 14 புள்ளிகள் தான் போல.. லக்னோவுக்கு வந்து இறங்கிய இடி.. ரன் ரேட்டால் டெல்லிக்கு வந்த சிக்கல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+