Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைவன் வந்துட்டான் டா! ரிவர்ஸ் ஹிட்டில் பந்தை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. ஆடிப்போன லக்னோ

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான 26வது லீகாட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரில் டெல்லி அணி தற்போது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 94 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இதனை அடுத்து எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆயுஸ் பதோனி, அர்ஷத் கான் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

IPL 2024 - DC Captain Rishabh pant reverse hit in to boundary of stonis bowling

ஆயுஸ் பதோனி 55 ரன்கள் சேர்க்க 20 ஓவர் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரித்விஷா ஜேக், பிரேசர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

பிரிதிவிஷா 32 ரன்களில் வெளியேற டெல்லிய அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்த் இந்த தொடரில் இரண்டு அரை சதத்தை அடித்து இருந்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரி அதிரடி காட்டுவதில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதை எல்லாம் பொய்யாக்கும் விதமாக இன்று பட்டையை கிளப்பினார்.

குறிப்பாக ரிஷப் பந்த் ஒற்றை கையால் சிக்சர் அடிப்பது, ரிவர்ஸ் சாட்டில் சிக்சர் அடிப்பது என பல சிக்னேச்சர் ஷாட்களை ஆடுவார். இந்த ஷாட்டை அவர் ஆடினார் என்றால் பார்மில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்த சூழலில் தான் மார்க்கஸ் ஸ்டோனிஸ் வீசிய பந்தை இடது கை பேட்ஸ்மேனாக நின்ற ரிசப் பண்ட், திடீரென்று வலது கை பேட்ஸ்மேன் போல் மாறி ரிவர்சில் பின்னால் தூக்கி அடித்தார்.

அந்த பந்து பௌண்டரி நோக்கி சென்றது. இந்த ஷாட்டை பார்த்தவுடன் லக்னோ வீரர்களே அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கவாஸ்கர் ரிசப் பந்த் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று பாராட்டினார். இதன் மூலம் டெல்லி அணி 18.1 வது ஓவரிலே நான்கு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Friday, April 12, 2024, 23:49 [IST]
Other articles published on Apr 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+