Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டபுள் ஹாட்ரிக் எடுத்தால் தான் வென்று இருக்க முடியும்! பிட்ச் மோசம் இல்ல-நாங்க தான்!சுப்மன் கில் கலகல

அகமதாபாத் : ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணி கேப்டன் கில் 89 ரன்கள் என்ற இலக்கை தற்காத்துக் கொள்ளும் போது பந்து வீச்சில் டபுள் ஹைட்ரிக் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் என கிண்டலாக பேசியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணி கேப்டன் கில், தங்களுடைய அணி பேட்டிங் மிகவும் சாதாரணமாக இருந்ததாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெறும் சராசரியான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம்.

IPL 2024 DC vs GT- Shubman gill says bowlers need to get double hat trick to defend 89 as target

இந்த போட்டியை எல்லாம் மறந்து விட்டு மீண்டும் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்துடன் களத்திற்கு திரும்ப வேண்டும். இந்த போட்டியில் ஆடுகளம் சரி இல்லையா என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் ஆடுகளத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஆட்டம் இழந்த முறையை நீங்கள் பார்த்தால் பீட்சில் எந்த பிரச்சினையும் இல்லை.

எங்களுடைய பேட்டிங்கில் தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எப்படி எங்களால் தற்காத்துக் கொள்ள முடியும். 89 ரன்களை எதிரணி சேஸ் செய்கிறது என்றால் உங்களுடைய பவுலர் டபுள் ஹாட்ரிக் எடுத்திருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

தற்போது பாதி தொடர் முடிவடைந்து விட்டது. முதல் பாதியில் நாங்கள் மூன்று வெற்றியை பெற்று இருக்கிறோம்.இரண்டாவது பாதையில் நாங்கள் ஐந்து முதல் ஆறு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் கடந்த காலங்களில் இதை நாங்கள் செய்திருக்கிறோம். மீண்டும் அதே போல் ஒரு சூழலில் இருக்கிறோம்.

அடுத்த போட்டிக்கு நாங்கள் நல்ல முறையில் தயாராகி, தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என்று நம்புகிறேன் என கில் தெரிவித்துள்ளார். குஜராத் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, நான்கு தோல்வி என ஆறு புள்ளிகள் உடன் ரன் ரேட் மைனஸ் 1.30 என்ற லெவலில் ஏழாவது இடத்தில் உள்ளனர்.

Story first published: Wednesday, April 17, 2024, 23:09 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+