Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் போச்சே! ஹர்திக் பாண்டியாவின் டி20 உலககோப்பை கனவு காலி.. 2 ஓவரில் கேரியர் ஓவர்

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பையில் இடம்பெற வேண்டும் என்று கடுமையாக போராடி வந்த ஹர்திக் பாண்டியாவின் வாய்ப்பை இரண்டே ஓவரில் டெல்லி அணி வீரர்கள் காலி செய்து இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் தற்போது 250 ரன்களுக்கு மேல் அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ரன் குவிப்புக்கு சாதகமான பேட்டிங் ஆடுகளம் மற்றும் பேட்டிங்கிற்கு ஏற்ற இம்பேக்ட் வீரர் விதி என அனைத்துமே தற்போது பௌலர்களுக்கு சங்கை ஊதி வருகின்றது.

IPL 2024 DC vs MI- Hardik Pandya bowling was completed destroyed by Jake Fraser

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இடம் பெற வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு தேர்வு குழு அறிவுறுத்தி இருந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சில போட்டிகளாக பந்து வீசி வருகிறார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று சாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

இதனால் டெல்லி அணி 6.4 ஓவர்கள் எல்லாம் நூறு ரன்களை கடந்து அபாரமாக விளையாடி வருகிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் சரியான உதை வாங்கினார். ஹர்திக் பாண்டியா தன்னுடைய பவுலிங் ஆல் டெல்லி அணியை கட்டுப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை க்ளோஸ் செய்யும் அளவுக்கு டெல்லி வீரர்கள் பட்டையை கிளப்பி விட்டார்கள்.

ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஜேக் இரண்டு சிக்ஸர்களையும், இரண்டு பவுண்டரிகளையும் அடித்து மிரட்டினார். எனினும் மீண்டும் பந்து வீச வந்த ஹர்திக் பாண்டியா, இரண்டாவது ஓவரில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் ஆகியவற்றை அபிஷேக் போரேலும், ஜேக் பிரேசர் ஒரு சிக்சரையும் அடிக்க ஹர்திக் பாண்டியாவின் முகமே வாடிப் போய்விட்டது. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மோசமாக இருப்பதால் அவர் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Saturday, April 27, 2024, 17:08 [IST]
Other articles published on Apr 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+