For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி தான் பேட்டிங் செய்கிறாரோ என நினைத்தேன்.. அப்படி இருக்கு இவர் ஆட்டம்.. பிரட்லீ கருத்து

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ஆர்சிபி அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. நடப்பு சீசனில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்ற முதல் அணி என்ற பெருமை பெற்றது மட்டுமல்லாமல், ஆர்சிபி அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியின் இந்த அபார ஆட்டத்திற்கு விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதார் போன்றோரின் அதிரடி ஆட்டம் தான் காரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

IPL 2024 DC vs RCB- Brett Lee Hails Rajat patidar by comparing with virat kohli

இந்த ஆண்டு முழுவதும் ரஜத் பட்டிதார் தொடர்ந்து வாய்ப்பை வீணடித்து வந்தார். இந்திய டெஸ்ட் அணியில் தமக்கு கிடைத்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் சொதப்பிய ரஜத் பட்டிதார் பிறகு அதிரடியை காட்டி ரன்களை சேர்த்து வருகிறார்.

அவர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டும் இவ்வளவு நாள் இந்த திறமையை எங்கே ஒளித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரட்லீ, ரஜத் பட்டிதார் ஆடிய ஒரு ஷாட்டை பார்த்து நான் விராட் கோலி தான் பேட்டிங் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். நடப்பு சீசனில் மட்டும் தான் ஐந்தாவது அரைசதத்தை அடித்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடினார். ஆனால் அதில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை.ஆனால் இன்று ஆட்டத்தில் அவர் ஆடிய ஒவ்வொரு ஷார்ட்டும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்று பிரட்லீ கூறினார். இது குறித்து பேசிய இர்பான் பதான், ரஜத் பட்டிதார் சுழற்பந்துவீச்சாளருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

தற்போது உள்ளே சுழற் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக பந்துவீசுவது எப்படி இருக்கிறது என்பது குறித்து பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ஆர்சிபி அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். மேலும் மற்ற அணிகளின் தயவும் கொஞ்சம் தேவைப்படும்.

Story first published: Monday, May 13, 2024, 11:04 [IST]
Other articles published on May 13, 2024
English summary
IPL 2024 DC vs RCB- Brett Lee Hails Rajat patidar by comparing with virat kohli விராட் கோலி தான் பேட்டிங் செய்கிறாரோ என நினைத்தேன்.. அப்படி இருக்கு இவர் ஆட்டம்.. பிரட்லீ கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+