Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs RR - 19 பந்தில் அரைசதம் விளாசிய ஆஸி. வீரர் ஜாக் பிரேஷர்.. சிக்சர் மழை.. கதிகலங்கிய ராயல்ஸ்!

டெல்லி : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் ,டெல்லி அணி மோதிய ஆட்டத்தில் ரன் மழை பொழிந்து வருகிறது. டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி மைதானம் மிகவும் சிறிய அளவு என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி மிகப்பெரிய ரன் குவித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் தொடக்க வீரராக டெல்லி அணியில் ஜேக் பிரேஷர் களம் இறங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் பிரேஷர் வெறும் பவுண்டரி மட்டும்தான் அடித்தார்.

IPL 2024- Delhi capitals opener Jake fraser McGurk hits 19 ball half century vs RR
q

முதல் ஓவரில் வெறும் 6 ரன்கள் தான் அடிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது ஓவரில் அபிஷேக் போரெல் இரண்டு பவுண்டரிகளை எடுத்தார். இரண்டாவது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதை அடுத்து மூன்றாவது ஓவரில் பவுல்ட் பந்துவீச்சை எதிர்கொண்டு ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி, சிங்கிள்ஸ் என மூன்றாவது ஓவரில் 15 ரன்கள் சேர்த்தார்.

அதேபோன்று நான்காவது ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அதையும் பிரேசர் எதிர்கொண்டார் இதில் ஜேக் பிரேஷர் தன்னுடைய சுய ரூபத்தை காட்டினார். முதல் மூன்று பந்துகளிலும் ஹட்ரிக் பவுண்டரி அடித்த ஜேக் பிரேஷர் நான்காவது பந்தில் சிக்ஸர், ஐந்தாவது பந்தில் பவுண்டரி ஆறாவது பந்தல் சிக்சர் என தெறிக்கவிட்டார். இதன் மூலம் 19 பந்தில் பிரேஷர் அரை சதத்தை அடித்தார்.

டெல்லி அணி நான்கு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 50 ரன்கள் அடித்ததாகும். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய ரன்கள் குவிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜேக் பிரேஷர் அதிரடியாக விளையாடுவதை பார்த்த சஞ்சு சாம்சன் உடனடியாக அஸ்வினை பந்து வீச அழைத்தார்.

அஸ்வின் பந்தை ஜேக் பிரேஷர் எதிர்கொள்ள முதல் பந்திலேயே அவர் ஆட்டம் இழந்தார். எனினும் 20 பந்துகளில் ஜேக் பிரேஷர் 50 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 250 என்ற அளவில் இருக்கிறது. இப்படி அதிரடியாக விளையாடும் ஜேக் பிரேஷருக்கு ஆஸ்திரேலிய அணியில் டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இவருடைய அதிரடி ஆட்டத்தை பார்த்து ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி பிரேஷரை அணியில் சேர்ப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, May 7, 2024, 21:04 [IST]
Other articles published on May 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+