Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவை பழிவாங்கும் ராகுல்! SRH க்கு எதிரான போட்டியில் டெஸ்ட் ஆட்டம்.. MI கதி அவ்வளவு தான்

ஐதராபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ டெஸ்ட் மேட்சில் ஆடுவது போல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

லக்னோ அணியும், சன்ரைசர்ஸ் அணியும் மோதும் இந்த ஆட்டம், மும்பை, குஜராத் மற்றும் ஆர்சிபி பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.

IPL 2024 - Did KL Rahul playing test innings to take revenge on MI Rohit sharma

ஒருவேளை சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றால் மும்பை அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற வேண்டும் என மும்பை ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டாஸ் வென்ற லக்னோ அணி இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் வேண்டும் என்று கே எல் ராகுல் ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்து வருகிறார்.

பாட் கம்மின்ஸ்க்கு எதிராக ஒரு அபாரமான சிக்ஸரை அடித்த கே எல் ராகுல் அதன் பிறகு டெஸ்ட் மோடுக்கு சென்று ஆமை வேகத்தில் ரன்கள் அடித்து வருகிறார். குறிப்பாக குயிண்டன் டி காக் இரண்டு ரன்களில் நித்திஷ் குமாரின் அபார கேச்சால் ஆட்டம் இழந்தார்.இதேபோன்று மார்க்கஸ் ஸ்டோனிசும் சன்வீர் சிங்கின் புத்திசாலித்தனமான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார். இதனால் லக்னோ அணி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்த சூழலில் கே எல் ராகுல் 25 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். குர்னல் பாண்டியா 13 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார். இதன்மூலம் 8 ஓவர் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் தான் எடுத்திருக்கிறது. பவர் பிளவில் லக்னோ அணி ஆறு ஓவர் முடிவில் 27 ரன்கள் தான் சேர்த்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இது மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற வேண்டும் என்பதற்காகவே கே எல் ராகுல் மெதுவாக விளையாடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.ஏனென்றால் டி20 உலக கோப்பையில் கே எல் ராகுல் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் ரோகித் சர்மாவை பழிவாங்குவதற்காக கே எல் ராகுல் இப்படி செய்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Wednesday, May 8, 2024, 20:42 [IST]
Other articles published on May 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+