Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி, ராஜஸ்தான் என அனைத்து அணிக்கும் வேட்டு.. சிஎஸ்கேக்கு சிக்கல் இல்லை.. பலவீனமான ஐபிஎல்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது முக்கியமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்று இடத்தை பிடிப்பதற்கு ஆறு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி தோல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூழலில் அணியில் அனைத்து வீரர்களும் இருப்பது தான் வெற்றி வாய்ப்பை கூட்டும்.

IPL 2024 - England cricketers Exit made RCB and RR Team very weak

ஆனால் முன்னணி அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரை விட்டு விலகி இருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் அணி நிர்வாகிகளை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. t20 உலக கோப்பை வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக ஏற்கனவே வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மான் விலகி சென்ற நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரை விட்டு விலகி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் முக்கிய அங்கமாக வகித்து வருகிறார்கள். இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் சென்றிருப்பது அனைத்து அணிகளையும் சிக்கலில் சிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் மிகவும் முக்கிய அங்கம் வகிக்கிறார்.தற்போது அவர் விலகி இருப்பது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதிக்க வைத்திருக்கிறது.

இதேபோன்று ஆர் சி பி அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த அணியின் வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டோப்ளி ஆகியோர் தொடரை விட்டு விலகி இருக்கிறார்கள். பஞ்சாப் அணியில் சாம் கரண், கே கே ஆர் அணியில் பில் சால்ட், சிஎஸ்கே அணியில் மோயின் அலி பல்வேறு வீரர்கள் தற்போது இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இது ஒவ்வொரு அணியும் வெகுவாக பாதிக்க வைத்திருக்கிறது. இதனால் பல்வேறு அணிகளும் தற்போது பிசிசிஐ இடையே போர் கொடியை தூக்கி இருக்கிறது. அனைத்து வெளிநாட்டு வீரர்களும் முழு ஐபிஎல் தொடரையும் விளையாடுவார்கள் என பிசிசிஐ உத்திரவாதம் அளித்த நிலையில் தற்போது ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று பல்வேறு நிர்வாகிகளும் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணி மோயின் அலி, இந்த தொடரில் வெகுவாக பயன்படுத்தவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் மோயின் அலி சென்றாலும் சாண்ட்னர், தீக்ஷனா போன்ற வீரர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ஆர் சி பி, ராஜஸ்தான், கே கே ஆர் போன்ற அணிகளுக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Monday, May 13, 2024, 22:46 [IST]
Other articles published on May 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+