Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RIP IPL - ஐபிஎல் தொடரை காப்பாற்ற பிசிசிஐ என்ன செய்ய வேண்டும்.. எந்த ரூல்சை மாற்ற வேண்டும்?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சுவாரசியப்படுத்த வேண்டும் என பிசிசிஐ செய்துள்ள சில மாற்றங்கள் அந்தப் போட்டியை அழிவில் பாதைக்கு கொண்டு செல்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வீரர்கள் ரன்கள் குவிப்பதை பலரும் ரசிப்பார்கள்.

ஆனால் அதே சமயம் பவுலர்களும் கடும் நெருக்கடியை கொடுத்து அதனை பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதிலே கிரிக்கெட்டில் மகிமை இருக்கிறது. ஆனால் தற்போது உள்ள காலத்தில் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

IPL 2024 - Fans asking for rules change to avoid bowlers getting trashed

இதே நிலை நீடித்தால் இனி பவுலர்களே இருக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டு விடும் என்று பல கிரிக்கெட் வீரர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும் பிசிசிஐ கொண்டு வந்துள்ள இம்பாக்ட் வீரர் விதி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சாதகமாக இருப்பதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு அணியும் கூடுதலாக 20 30 ரன்களை சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது போதாத குறைக்கு சிமெண்ட் தரைக்கு போட்டி போடும் விதமாக மைதானத்தின் ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது பவுலர்களுக்கு சாவு மணியை அடிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பவுண்டரி எல்லை 60 மீட்டர்,50 மீட்டர் என்று குறைத்து வைக்கப்பட்டு இருப்பதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. பேட்டை சுழற்றும் போது பந்து எங்கேயும் பட்டால் அது சிக்ஸருக்கு செல்லும் நிலை தற்போது இருக்கிறது.

இந்த சூழலை மாற்றினால் மட்டுமே கிரிக்கெட் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் இல்லையெனில் அனைத்தும் மட்டும் பவுண்டரி, சிக்ஸர் என சென்றால் பார்வையாளர்களுக்கு அது முயற்சியை ஏற்படுத்த என்று பல வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பௌண்டரி லைனை 70 அல்லது 75 மீட்டருக்கு குறையாமல் வைக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மைதானத்தின் தூரம் அதிகமாக இருந்தால்தான் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ஷார்ட்டுகளை கேட்ச் பிடிக்க வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆடுகளம் வெறும் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாமல் பவுலர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஏதுவாக வாய்ப்பு கொடுக்க வகையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஒரு பவுலருக்கு மட்டும் கூடுதலாக ஒரு ஓவரை வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அன்றைய நாளில் சிறப்பாக செயல்படும் பவுலர்கள் ஐந்து ஓவரை வீச முடியும் இதை தவிர impact வீரர் விதியில் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக பேட்ஸ்மேனையும், பவுலருக்கு பதிலாக பவுலரையும் மாற்றும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இதேபோக்கு நீடித்தால் ஐபிஎல் தொடர் தன்னுடைய சுவாரசியத்தை இழந்து விடும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பவுண்டரி, சிக்சர் என சென்றால் அதனை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று ஜெய்ஷா தப்பு கணக்கு போடுவதாகவும் ஒரு நாள் கிரிக்கெட் அல்வின் பாதைக்கு செல்லும் நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் அந்த நிலைக்கு தள்ளப்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

Story first published: Saturday, April 27, 2024, 22:43 [IST]
Other articles published on Apr 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+