Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனம் தளராதீங்க காவ்யா.. இம்முறை ஐபிஎல் கோப்பை உங்களுக்கு தான்.. பாட் கம்மின்ஸ் ராசியை பாருங்க

ஐதராபாத் : ஐபிஎல் கோப்பை கிரிக்கெட் தொடரில் பல திறமையான வீரர்கள் இருந்தும் பெரிய அளவில் சாதிக்காத அணி என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான். ஹைதராபாத் அணியில் இருக்கும் வீரர்களுக்கு உள்ள ரசிகர்களை விட, அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறனுக்காக போட்டியை பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம்.

அதுவும் காவ்யா மாறன் போட்டியை பார்க்கும் போது கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்சனும் சமூக வலைத்தளத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆதிக்கம் செலுத்தும். ஹைதராபாத் அணி வீரர்கள் ரன் அடிக்கும் போது மகிழ்ச்சி கொள்வதும் தோற்கும் போது அவர் கொடுத்த சோக ரியாக்சனும் பார்க்க இரண்டு கண்கள் போதாது.

IPL 2024 - Fans consoling Sunrisers owner Kavya maran with bizarre stat regarding pat cummins

இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடை ஒன்றிலே, வெளிப்படையாக கூறியிருக்கிறார். கலாநிதி மாறன் நல்ல வீரர்களை வாங்கி சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். ஏனென்றால் டிவியில் காவ்யா மாறன் சோகமாக இருப்பதை பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்சை 20 கோடியை 50 லட்சம் ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. மேலும் அவரை கேப்டனாகவும் நியமித்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் அந்த அணி சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்தது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க முடியாமல் 204 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் வழக்கம்போல் நாம் வெற்றி பெற்று விடுவோம் என மகிழ்ச்சியில் இருந்த காவ்யா மாறன் அணி தோற்ற உடன் சோகத்தில் இருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் சிலர் காவ்யா மாறனை சோகமாக இருக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியதாகவும் ஆனால் இறுதியில் உலக கோப்பையை பாட் கம்மின்ஸ் தாம் வென்றார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதை போல் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றாலும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை பாட் கம்மின்ஸ் வென்று தந்து விடுவார் என்றும் கூறியுள்ளனர். என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேட்க தான் தோன்றுகிறது. ஆனால் காவ்யா மாறனின் சோகமான முகத்தை பார்த்தால் இவர்களுடைய கூற்று சரிதான் என நினைக்கத் தோன்றுகிறது என்று சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Story first published: Sunday, March 24, 2024, 14:32 [IST]
Other articles published on Mar 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+