Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா மீது இவ்வளவு கோபமா? செருப்பால் அடித்த ரசிகர்கள்.. வீடியோ

பொதுவாக வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை தான் இந்திய ரசிகர்கள் வெறுத்து அவர்களுக்கு எதிராக மைதானங்களில் குரல் கொடுப்பார்கள். ஆனால் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் அங்கு இருக்கும் ரசிகர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்பு குறள் எழுப்பி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதற்குக் காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து ஐந்து கோப்பைகளை வென்று தந்தார். இந்த நிலையில் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவிய ஹர்திக் பாண்டியா தமக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால் தான் அணிக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.

IPL 2024 - Fans throwing Chapels at Hardik Pandya in Private screening

மும்பை இந்தியன்ஸ் அணியும் ரோகித் சர்மாவுக்கு வயது ஆவதால் எதிர்காலத்தை நினைத்து திடீரென்று ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தார்கள். இதுதான் தற்போது பிரச்சனைக்கு காரணம். ஹர்திக் பாண்டியா அரசியல் செய்து இவ்வாறு ரோகித் சர்மாவுக்கு ஆப்பு வைத்து விட்டதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.

மேலும் பாரம்பரியமிக்க மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் இடமிருந்து ஹர்திக் பிளான் பண்ணி பிடுங்கி விட்டார் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் மும்பை அணி விளையாடிய முதல் போட்டியில் ரசிகர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தினர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், பொது இடம் ஒன்றில் பெரிய திரையில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய போட்டி ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவிய உடன் அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசி கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மும்பை அணி ரசிகர்கள் தங்களது செருப்பு எடுத்து திரையில் தோன்றிய ஹர்திக் பாண்டியாவை அடித்தனர். மேலும் அங்கிருந்த சார்களையும் தூக்கி, திரையில் இருந்த ஹர்திக் பாண்டியா மீது வீசினர். ஹர்திக் மீது எந்த அளவுக்கு கோபம் இருக்கிறது என்பதை இந்த வீடியோ காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Story first published: Thursday, March 28, 2024, 7:00 [IST]
Other articles published on Mar 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+