சென்னை : சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே பவுலர் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஆர்சிபி அணி 173 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தார். லியோ படத்தில் ஹைனா ஊருக்குள் புகுந்த போது அதனை தடுக்க விஜய் முயற்சிப்பார். அப்போது ஹைனாவை விஜய் திசை திருப்பிய போது, ஒரு முனையில் இருந்து கவுதம் மேனனை மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்த அறிவுறுத்துவார். ஆனால் சரியாக அந்த நேரத்தில் துப்பாக்கி செயல்படாமல் போகும். அப்போது அவர், "துப்பாக்கி வேலை செய்யலை பார்த்திபன்" என்று கூறுவார். அதனை அப்படியே துஷார் தேஷ்பாண்டே சொல்வதாக மாற்றி, "பால் போட கை வரலை ருதுராஜ்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 20 பந்துகளில் ஒரு சிக்ஸ் உட்பட 21 ரன்கள் சேர்த்தார். பவர் பிளே ஓவர்களில் பேட்டிங் செய்தும் விராட் கோலி பவுண்டரி அடிக்காமல் இருந்ததை ரசிகர்கள் விமர்சித்தனர். இதனை மின்சார கண்ணா படத்தில் மன்சூர் அலிகான், துப்பாக்கியால சுட முடியாதுடா.. ஏன்னா புல்லட் கிடையாதுடா என்று கூறுவார். அதனை விராட் கோலி சொல்வதாக மாற்றி, நீங்க ஏன் கோலி பவர் பிளேவில் நல்லா விளையாடலை என்ற கேள்விக்கு, டேய்.. நான் பவர் பிளேவில் பேட்டிங் பிடிச்சதே 6 பால் தான்டா என்று பதிலளிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள ஜாலியோ ஜிம்கானா ரகம்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆர்சிபி அணி 6 விக்கெட்டுள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே லோகோ, ஜெர்சி மற்றும் அணியின் பெயர் உட்பட அத்தனையையும் ஆர்சிபி அணி இந்த சீசனுக்கு முன்பாக மாற்றிவிட்டது. இருப்பினும் ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் 16 ஆண்டுகளாக தோல்வியடைந்து வருகிறது. இதனை வியாபாரி படத்தில் வடிவேலு சொல்லும் வசனத்தை மாற்றி, "டீம் ஜெர்சி மாத்தியாச்சு.. லோகோ மாத்தியாச்சு.. பெயரையும் மாத்தியாச்சு.. இத்தனை விஷயங்களை மாற்றியும் இந்த டீம் உருப்படுற மாதிரி தெரியலையே குருவே" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணிக்காக ஆடிய முஷ்தாஃபிசுர் ரஹ்மான், 7 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 79 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் முஷ்தாஃபிசுர் ரஹ்மான் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை யோகி பாபு ஸ்டைலில், மற்ற டீம்ல இருக்கிறப்போ டம்மியா இருந்துட்டு சிஎஸ்கே வந்துட்டா மட்டும் வெறிக்கொண்டு ஆடுறாங்களே என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி பவுலர்களை நம்பி கேப்டன் டூ பிளஸிஸ் முதல் பேட்டிங் செய்தார். ஆனால் அதுவே ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது. அதனை பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு, "கூலி மிச்சமாகும்னு இவங்களை வேலைக்கு வைத்தேன் பார்த்தியா.. என் புத்திய செருப்பாலயே அடிக்கனும்டா" என்று சொல்லுவார். அதனை மாற்றி டூ பிளஸில் பேசுவதாக, "இந்த டீம்ல இருக்குற அம்புட்டு பவுலர்ஸும் தேஷ்பாண்டேவா இருக்காங்கனு தெரிஞ்சும்.. எதிர்காலத்தில முன்னேறிருவாங்கனு நம்பி கேப்டன்சிக்கு ஆசைப்பட்டு இந்த டீம்க்கு வந்தேன் பார்த்தீங்களா.. என் புத்திய.." என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட குபீர் ரகம்.
