Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஒன்றும் பாலிவுட் கிடையாது.. எச்சரிக்கை கொடுத்த கம்பீர்.. வெறித்தனமா விளையாடனும்.. புரியுதா?

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வாங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் இம்முறை எப்படியாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று ஷாருக்கான் அணி பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக லக்னோ அணியில் மென்டராக இருந்த கம்பீர் மீண்டும் தற்போது கொல்கத்தா அணிக்கு மென்டராக திரும்பி இருக்கிறார். கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த போது தான் அந்த அணி ஐபிஎல் பட்டத்தை வென்றது.

IPL 2024 - Gautam Gambhir gives ultimatum to KKR Team members to Play well

இந்த நிலையில் எப்படியாவது இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கடும் விரக்தியில் கம்பீர் இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறேன். ஐபிஎல் என்பது மிகவும் தீவிரமான கிரிக்கெட் ஆகும். இது ஒன்றும் பாலிவுட் கிடையாது.

மேலும் தனிப்பட்ட வீரர் குறித்தும் கிடையாது. மேலும் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நடைபெறும் பார்ட்டி குறித்தும் கிடையாது. ஐபிஎல் என்பது களத்திற்கு சென்று வெறித்தனமாக விளையாடி வெற்றி பெற முயல்வது தான். இதனால் தான் நான் சொல்கிறேன் உலகத்திலே மிகவும் கடினமான கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் தான்.

ஏனென்றால் இங்கு நாம் விளையாடுவது தொழில் முறை கிரிக்கெட். இன்னும் சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டை ஒப்பிட்டு பார்த்தால், ஐபிஎல் தொடர் அதற்கு நிகராக வரும் மற்ற கிரிக்கெட் தொடர். அந்த அளவுக்கு கிடையாது ஐபிஎல் தொடரில் நீங்கள் வெற்றிகரமான அணியாக விளங்க வேண்டும் என்றால் காலத்திற்கு சென்று உங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.

கொல்கத்தா அணி ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் மிகவும் நம்பிக்கை கூறிய ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பிரியத்திற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். கொல்கத்தா அணி ரசிகர்கள் முகத்தில் நாம் சிரிப்பை கொண்டு வர வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலே மிகவும் விசுவாசமான ரசிகர்கள் என்றால் அது கொல்கத்தா அணி ரசிகர்கள் தான். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் அவர்கள் முதல் மூன்று ஆண்டுகள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள் என்று கம்பீர் கூறியிருக்கிறார்.

Story first published: Monday, March 4, 2024, 18:12 [IST]
Other articles published on Mar 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+