Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் இதை செய்தால் தான், என் காதல் நிறைவேறும்.. இளம் பெண்ணின் கோரிக்கை.. பதில் தந்த கம்பீர்

கொல்கத்தா : : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது பலமான அணியாக விளங்கி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 19 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது.

கொல்கத்தா அணி வெற்றி பெற்றதற்கு காரணம் கம்பீர் அணியின் மென்டராக வந்த பிறகுதான் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். கம்பீர தன்னுடைய ஆக்ரோஷமான யுக்திகளால் கொல்கத்தா அணியின் சிறந்த செயல்பாட்டிற்கு காரணமாக அமைந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்

IPL 2024 - Gautam gambhir reaction to KKR Fan girl hilarious comment

இந்த நிலையில் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி நாடாளுமன்றத்தில் எம்பியாக இருந்தாலும் சரி ஒரு அணியின் பயிற்சியாளராக இருந்தாலும் சரி கம்பீர் என்றுமே ஒரே ரியாக்சன் தான் கொடுப்பார். எப்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சிரிப்பதற்கும் அழுகை காட்சிக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுப்பாரோ, அதேபோல் கம்பீரும் எப்போதும் சிரிக்காமல் இருப்பார்.

இந்த நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக பெண் ஒருவர் மைதானத்தில் ஒரு பதாகை எந்தி இருந்திருந்தார். அதில் கம்பீர் சிரிக்கும் வரை நான் விரும்பும் நபரிடம் என் காதலை தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த பதாகை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த பதாகை பார்த்த கம்பீர் தற்போது இதற்கு பதில் அளித்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை போட்டு தான் சிரிக்கும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டு இதோ நான் சிரித்து விட்டேன் என்பது போல் பதில் அளித்திருக்கிறார். கம்பீரின் இந்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

கம்பீர் சிரித்ததால் இனி அந்தப் பெண் தான் விரும்பும் நபரிடம் போய் காதலை சொல்வாரா என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் கம்பீரையே அந்தப் பெண் சிரிக்க வைத்து விட்டதால் அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் விருது வழங்க வேண்டும் என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, May 15, 2024, 23:13 [IST]
Other articles published on May 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+