Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - எந்த குரூப்பில் இடம்பிடித்திருக்கிறது சிஎஸ்கே.. உறுதியான பிளே ஆப் வாய்ப்பு.. இதை பாருங்க

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான அட்டவணை முழுசாக வெளியிடப்படவில்லை. தேர்தல் நடைபெற உள்ளதால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் குரூப் முறை கடந்த 2022 ஆம் ஆண்டு சீசன் முதல் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022 ஆம் ஆண்டு சீசனில் 10 அணிகளும், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதில் எந்த அணி அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறதோ, அதிகப் போட்டிகளை வென்றிருக்கிறது என்பதை பார்த்து பிரிவு அமைக்கப்படும்.

IPL 2024 - Group list announced and Which Team csk plays twice

அதன்படி இந்த ஆண்டு எந்த அணி எந்த குரூப்பில் இடம் பிடித்திருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஒரு குரூப்பில் இருக்கும் அணி மற்ற குரூப்பில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும், தங்களது குரூப்பில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு சீசனில் குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குரூப் பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இடம் பிடித்திருக்கிறது. குரூப் ஏ வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ஆர் சி பி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் இடம் பிடித்துள்ளன.

இதன்படி சிஎஸ்கே அணி வரும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளை இரண்டு முறை எதிர்கொள்ள உள்ளது. அதன்படி தங்களுடைய குரூப்பில் உள்ள சன்ரைசர்ஸ் ஆர்சி பி பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளை ஒருமுறை எதிர்கொள்ள உள்ளது. இதேபோன்று மும்பை அணி, சிஎஸ்கே, ஆர்சிபி, ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளை இரண்டு முறையும் டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ ஆகிய அணிகளை ஒரு முறையும் எதிர்கொள்ள உள்ளது.

ஆர் சி பி அணியை பொறுத்தவரை மும்பை, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளை இரண்டு முறையும், சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், குஜராத் ஆகிய அணிகளை ஒரு முறையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலவரப்படி பார்த்தால் சிஎஸ்கே அணி குறைகள் இருக்கக்கூடிய அணியாக கருதப்படும். லக்னோ, டெல்லி ஆகிய அணிகளை இரண்டு முறை எதிர்கொள்ள உள்ளது. இதனால் இம்முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, March 24, 2024, 15:33 [IST]
Other articles published on Mar 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+